Category: குட்டிக் கதைகள்

நாம் நடக்கவேண்டிய பாதை…

இன்று நித்திரை வரவில்லை, ஆக முகப்புத்தகத்தில் நீண்ட நாட்களுக்குப் பிறகு எழுதுகிறேன். ஒரு சிறந்த எழுத்தாளனாக அல்ல. வாழ்க்கை என்பது ஒரு போர்க்களமே என்பதை உணர்ந்த அன்றாட மானிடனாக. இது கதையல்ல. வாழ்வின் அனுபவம். ஆம், வெகு நாட்களாகவே என்னிடம் ஒரு…

தனித்து நில்!

கூட்டத்தோடு நிற்பது மனிதத் தன்மை, தேவனுக்காகத் தனித்து நிற்பதோ தெய்வத் தன்மை. சாதாரண மனிதர்கள் தமது சக மனிதர்களைப் பின்பற்றி, கடல் அலையைப்போல நிலையற்ற வாழ்க்கை வாழ்வார்கள். ஆனால், உலக வாழ்வுக்கு எதிர் நீச்சலிட்டு இறைக்கொள்கையை உறுதியாகப் பின்பற்றுபவர் தனித்து நிற்பவராவார்.…

வாழ்க்கை குறுகியது ஆனால் அழகியது !

எத்தனை முறை படித்தாலும் திகட்டாதவை! ஒரு கப்பலில் ஒரு தம்பதி பயணம் செய்து கொண்டிருக்கிறார்கள். கப்பல் கவிழும் ஓர் அபாயமான கட்டத்தில், ஒரேயொருவர் மட்டுமே தப்பிக்கவுள்ள படகில் , மனைவியைப் பின்னே தள்ளி விட்டுக் , கணவன் மட்டும் தப்பிச் செல்கிறார்.…

குறை சொல்லும் உலகம்

நன்மைசெய்யும்படி உனக்குத் திராணியிருக்கும்போது, அதைச் செய்யத்தக்கவர்களுக்குச் செய்யாமல் இராதே. – (நீதிமொழிகள் 3:27)📖 திடீரென்று 🏝ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டு 💦🌊தண்ணீர் கரைபுரண்டு ஓடியது. 👉🏻அதில் ஒரு 👩🏻பெண் அடித்து செல்லப்பட்டு தத்தளித்து கொண்டிருந்தாள். அதை அவ்வழியே வந்த 🤕துறவி ஒருவர் கவனித்தார்.…

அடுத்தவன் பேச்சு…

ஒரு காட்டில் சிங்க ராஜாவின் பிறந்த நாள் . எங்கும் அலங்காரங்கள்,ஆடல் , பாடல் , கலை நிகழ்ச்சிகள். அதிகாலை விருந்து துவங்கி விட்டது . அன்று காட்டு மிருகங்கள் எல்லாமே குதூகலமாகத் திரிந்தன. ஆனாலும். சிங்க ராஜா அதிகமாய் விரும்புவது…

மனசாட்சி

அமெரிக்காவின் செவ்விந்தியன் ஒருவன் ஒரு வெள்ளை அமெரிக்கரை அணுகி, புகைப்பதற்கு கொஞ்சம் புகையிலை கேட்டான். அமெரிக்கர் தன் பாக்கெட்டினுள் கையைவிட்டு ஒரு கை நிறைய புகையிலை பொடியை அள்ளிக் கொடுத்தார். அடுத்தநாள் அந்த செவ்விந்தியன் அமெரிக்கரிடம் வந்து, “ஐயா நீங்கள் கொடுத்த…

எரிந்து பிரகாசிக்க ஆரம்பி…

நீலகிரி மலை பிரதேசத்தில்., தேயிலை தோட்டத்தில் மத்தியில் ஓர் ஆலயம் இருந்தது. அந்த ஆலயத்தில் வாரந்தோறும் தேவனை ஆராதித்து வந்த “சாலமன்” அங்கு வருவதை சில வாரங்களாக நிறுத்திவிட்டான். அவன் வேறெந்த ஆராதனையிலும் கலந்து கொள்ளவில்லை. மிகவும் வேதனையுற்ற போதகர் அவனை…

நாற்றத்தில் பழகின வாழ்க்கை

⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐ ஒரு குடும்பத்தினர் தங்கள் வேலையினிமித்தம் புதிதாக ஒரு ஊருக்கு மாறி சென்றிருந்தார்கள். அங்கு வாடகைக்கு ஒரு வீடு தேடி அலைந்து கொண்டிருந்தார்கள். எங்குமே கிடைக்கவில்லை. கடைசியில் ஒரு பெரிய சாக்கடைக்கு அருகில் உள்ள வீடு மட்டுமே கிடைத்தது. பயங்கர துர்நாற்றம்.…

உடைந்த முட்டைகள்…

ஒரு பையன் முட்டை கூடைகளுடன் மிதிவண்டியில் சென்றான் கல் தடுக்கி மிதிவண்டியுடன் விழுந்துவிட்டான்முட்டைகள் அனைத்தும் உடைந்து விட்டன கூட்டம் கூடி விட்டது வழக்கம்போல் இலவச உபதேசங்கள். “பாத்துபோக கூடாதா? “ ” என்னடா… கவனம் இல்லாம சைக்கிள் ஓட்டுற?” அப்போது ஒரு…

கோபம்

ஒருமுறை ஒரு பாம்பு ஒரு சமையலறையில் நுழைந்து விட்டதாம். அந்தப் பாம்பு சமையலறைக்குள் ஊர்ந்து சென்று கொண்டிருக்கும் போது, ஒரு கூர்மையான கத்தி அதை கீரி விட்டதாம். அதை உணர்ந்த பாம்பு, நீ என்னையே கீரி விட்டாயா? என்றுக்கூறி கோபத்துடன் கத்தியை…

ஒருமித்து வாசம்பண்ணு!

”தன் குடும்பம் ஏன் முன்னேறவில்லை; தன் சபை ஏன் எழுப்புதலடையவில்லை?” என்று சோர்வோடு அமர்ந்திருந்த ஒரு பக்தன், தன் அருகில் ஒரு எறும்புக் கூட்டத்தைக் கண்டார். ஒரு சிறு சர்க்கரைக் கட்டியை ஏழு, எட்டு, எறும்புகள் ஒன்று சேர்ந்து இழுத்துச் செல்ல…

அடுத்தவர்களுக்கு நல்லது நினையுங்கள்.

ஒரு நாள் அப்பா, இரண்டு கிண்ணங்களில் கஞ்சி சமைத்து சாப்பாட்டு மேசை மேல் வைத்தார். ஒரு கிண்ணத்தில் கஞ்சியின் மேலே ஒரு முட்டை. அடுத்த கிண்ணத்தின் கஞ்சியின் மேலே முட்டை இல்லை. அப்பா என்னிடம் கேட்டார். உனக்கு இந்த இரண்டில் எது…

விலை மதிப்பற்ற புத்தகம்

பாரசீகம் என்று பண்டைக்காலத்தில் அழைக்கப்பட்ட ஈரான் நாட்டில் 19ம் நூற்றாண்டில் பிறந்த மன்சூர்சிங் தனது வாலிப நாட்களில் இயேசு கிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டார். தனது விடாமுயற்சியின் மூலமாக பல்மருத்துவராக மாறிய இவர், ஈரான் நாட்டின் பாலைவனங்களிலும், மலைகளிலும் சுற்றித்திரிந்து, ஏழை…

நல்லதைத் தெரிந்து கொண்டு வாழப்பழகிக் கொள்!

குட்டிக் கதை 🔵🔵🔵🔵🔵🔵🔵🔵🔵🔵🔵🔵🔵🔵🔵🔵 ‘திராட்சைப் பழம் சாப்பிடலாம் என்றால் ஏன் வைன் குடிக்கக்கூடாது?’ சாது பெரிதாக எதுவும் சாப்பிடுவதாகத் தெரியவில்லை. அனேகமாகப் பழங்களைத்தான் சாப்பிடுவது வழக்கம். அன்று புதிதாக ஆச்சிரமத்திற்குச் சேவை செய்ய வந்த சீடன்தான் பழத்தட்டுடன் அவரிடம் வந்தான். அவர்…

எதையாவது விட்டு செல்!

தன் தந்தையை ஒரு உயர்தர உணவகத்திற்கு அழைத்துச் சென்றான் மகன்.அந்தப் பெரியவர் வயது முதிர்ந்தவர் மட்டுமல்ல கொஞ்சம் இயலாமலும் இருந்தார்.அவர் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது சில பருக்கைகளும் உணவுத்துண்டுகளும் அவரது சட்டையிலும் வேஷ்டியிலும் மற்றும் தரையிலும் விழுந்து கொண்டிருந்தது. அருகிலிருந்து சாப்பிடுபவர்கள்…

நீ எனக்கு முன்பாக உத்தமனாயிரு.

ஒரு இளம் பெண், தன் போதகரிடம் சென்று, “நான் எப்படி ஆடை அணிய வேண்டும்?” என்று கேட்டாள். அதற்கு அந்த போதகர், உன்னுடைய ஆடை இப்படி இருக்க வேண்டும், அப்படி இருக்க வேண்டும். என்று சொல்ல நான் ஒரு தையல்காரன் அல்ல.…

கடலில் ஒருவன்

கடலில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவனின் செருப்பு காணாமல் போய்விட்டது. அவன் உடனே கடற்கரையில் எழுதினான், “இந்தக் கடல் மாபெரும் திருடன்…!” கொஞ்சம் தூரத்தில் ஒருவர் அதிகமாக மீன்பிடித்துக் கொண்டிருந்தார். அவர் நினைத்ததை விடவும் அதிகமாக மீன்கள் வலையில் சிக்கின. அவர் அக்கடற்கரையில்…

அவசரப்பட்டால் காரியம் ஆகாது

அவசரப்பட்டால் காரியம் ஆகாது🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩 ”வேகமாக வெற்றி கிடைக்க எவ்வளவு உழைக்க வேண்டும்?” என்று கேட்ட இளைஞனை நிமிர்ந்துப் பார்த்தார் குரு. “ஏன்? என்னாயிற்றூ?” “நான் தொழில் துவங்கி ஒரு வருடம் ஆகிவிட்டது. ஆனால் இன்னும் என்னால் நான் நினைத்த இலக்கை அடைய…

வாா்த்தை தரும் பெரு மகிழ்ச்சி

கண் பார்வை இல்லாத சிறுவன் ஒருவன் வீதியில் இருக்கும் ஒரு மாடிப் படிக்கட்டில் அமர்ந்துக் கொண்டு பிச்சை எடுக்கிறான். அவன் அருகே ” நான் குருடன், உதவுங்கள் ” என்ற வாசகம் எழுதப்பட்ட பலகை ஒன்றும் காசு போடுவதற்கான பாத்திரம் ஒன்றும்…

பிரசங்கியாரும் விவசாயியும்

ஒரு பிரசங்கியார் ஓர் கிராமத்தில் உள்ள ஓர் சிறிய சபையில் பிரசங்கிப்பதற்காய் முதன் முறையாய் போயிருந்தார். அங்கே ஒரு மனிதன் மாத்திரமே வந்திருந்ததால் பிரசங்கிப்பதா, இல்லையா என்ற குழப்பத்தில் அந்த மனிதனிடமே தான் பிரசங்கிக்கவோ வேண்டாமா எனக் கேட்டார். அதற்கு அந்த…

சிந்திக்க ஒரு சிறுகதை…

ஒரு பையன் டெலிபோன் பூத்திற்கு சென்று ஒரு நம்பருக்கு டயல் செய்தான்..!! அந்த டெலிபோன் பூத் அருகில் இருந்த அந்த கடையின் முதலாளி அந்த பையன் பேசுவதை கேட்டு கொண்டிருந்தார்..!! பையன்: “சார் உங்கள் தோட்டத்தை பராமரிக்கும் வேலையை எனக்கு கொடுக்க…