கண் பார்வை இல்லாத சிறுவன் ஒருவன் வீதியில் இருக்கும் ஒரு மாடிப் படிக்கட்டில் அமர்ந்துக் கொண்டு பிச்சை எடுக்கிறான். அவன் அருகே ” நான் குருடன், உதவுங்கள் ” என்ற வாசகம் எழுதப்பட்ட பலகை ஒன்றும் காசு போடுவதற்கான பாத்திரம் ஒன்றும் இருக்கிறது.

அவ்வழியே செல்லும் யாரும் அவனுக்கு பெரிதாக உதவியதாக தெரியவில்லை. பாத்திரத்தில் சில்லறைகள் விழுந்தபாடும் இல்லை. அந்த வழியை கடந்த ஆண் ஒருவன், சிறுவனுக்கு உதவினான். பாக்கெட்டில் இருந்து சில்லறைகள் எடுத்து பாத்திரத்தில் போட்டான்.

பின், அருகில் இருந்த பலகையைப் பார்த்தான். இரண்டு நிமிடங்கள் சிந்தித்து விட்டு, பலகையை எடுத்து அதில் இருந்த வாசகத்தை மாற்றினான்.

அவன் சென்ற சிறிது நேரத்திலேயே பாத்திரம் சில்லரைகளால் நிரம்பத் தொடங்கியது. சிறுவனுக்கோ ஆச்சரியம் தாங்க முடியவில்லை.

வாசகத்தை மாற்றி அமைத்தவர், ஏதேனும் மாற்றம் உண்டா? என்றுப் பார்க்க மீண்டும் அவ்விடத்திற்கு வந்தார். அவர் எதிர்பார்த்தது போலவே பாத்திரம் சில்லரைகளால் நிரம்பி இருந்தது.

சிறுவன் அவரின் கால் தடத்தால் வந்த ஓசையை வைத்து அவரைக் கண்டு கொண்டான். நீங்கள் தானே முன்பு வந்து இந்த பலகையை எடுத்து மாற்றினீர்கள். என்ன எழுதி இருந்தீர்கள். எப்படி இப்போது நிறைய பேர் உதவி இருக்கிறார்கள் என்றான்.

அந்த இரண்டாம் வாசகம் தான் என்ன? இரண்டாம் வாசகத்தில் ” இன்று மிகவும் அழகான நாள், அதை என்னால் பார்க்க முடியல்லை” என்று இருந்தது.

இரண்டு வாசகங்களுமே சிறுவன் குருடன் என்பதைத் தான் குறிப்பிடுகின்றன. ஆனால், முதல் வாசகம் சிறுவன் பார்வை இல்லாதவன் என்று மட்டுமே சொல்கிறது.

இரண்டாம் வாசகம் நம் அனைவருக்கும் பார்வை இருப்பதை நினைவுபடுத்துகிறது. அவனிடம் இல்லாத ஒன்று நம்மிடம் இருப்பதை கண்டதும் மகிழ்ச்சியில் நிறைய உள்ளங்கள் அவனுக்கு உதவியது.

பிரியமானவர்களே, உங்களுக்கு எது கொடுக்கப்பட்டிருக்கிறதோ அதற்கு முதலில் நன்றி சொல்லுங்கள். வாழ்க்கை உங்களுக்கு அழுவதற்கு 100 காரணங்கள் கொடுத்தால், என்னிடம் மகிழ்ச்சியாயிருப்பதற்கு 1000 காரணங்கள் இருக்கிறது என்றுக் காட்டுங்கள்.

எதைச் சொன்னாலும் செய்தாலும் மற்றவர் மனம் மகிழும்படிச் சொல்லுங்கள்.

எதையும் நேர்மறையாய் எதிர்கொள்ளுங்கள். மாற்றிச் சிந்தியுங்கள். உங்கள் வாழ்க்கை அழகாகும்.

சூழ்நிலையை மகிழ்ச்சிக்குள்ளாக்க உங்களால் முடியும். எத்தகைய கடினமான வேதனையான, சோகமான சூழ்நிலைகளில் மற்றவர்கள் இருக்கும்போது தேவன் உங்கள் மனதில் தந்து இருக்கும் மகிழ்ச்சியை அவர்களிடம் சுலபமாக உங்கள் வாா்த்தையினாலும், செய்கையினாலும் சாிபண்ணி அவர்கள் மனதையும் தேவன் தரும் எல்லையில்லா மகிழ்ச்சிக்குள்ளாக்க முடியும்.

வேதாகமத்தில். நெகேமியா அவர்களை நோக்கி: நீங்கள் போய்க் கொழுமையானதைப் புசித்து, மதுரமானதைக் குடித்து, ஒன்றுமில்லாதவர்களுக்குப் பங்குகளை அனுப்புங்கள்.

இந்த நாள் நம்முடைய ஆண்டவருக்குப் பரிசுத்தமான நாள், விசாரப்படவேண்டாம். கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பதே உங்களுடைய பெலன் என்றான்.

லேவியரும் ஜனங்களையெல்லாம் அமர்த்தி: அழாதிருங்கள், இந்த நாள் பரிசுத்தமான நாள், விசாரப்படவேண்டாம் என்றார்கள். அப்பொழுது ஜனங்கள் எல்லாரும் தங்களுக்கு அறிவிக்கப்பட்ட வார்த்தைகளை உணர்ந்துகொண்டபடியால், புசித்துக் குடிக்கவும், பங்குகளை அனுப்பவும், மிகுந்த சந்தோஷம் கொண்டாடவும் போனார்கள். (நெகேமியா 8:10 -12)

அடுத்தவர்களை மகிழ்ச்சியும், சந்தோஷத்துக்கு உள்ளாக்கவே தேவன் நமக்குள் அளவில்லாத மகிழ்ச்சியை தந்துள்ளாா். -(ரோமா் 4:17)

ஆம், நண்பர்களே! கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பதே உங்களுடைய பெலன். #நீங்கள் _ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *