இறைவன் உனக்குக் கொடுத்த தோட்டம்: திருச்சபை.
கடவுள் பயமுள்ள ஒருவன், தனக்கு இறைவன் கொடுத்துள்ள தோட்டமாகிய சபையில் இருப்பான். (மத் 20:1)
தோட்டம் என்றால் Amazing-The-Family-HD-Wallpaperபை என்று அர்த்தம். இது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். நாபோத்துக்கு ஒரு தோட்டம் இருந்தது. 1ராஜ 21:1. சாலமோனுக்கு ஒரு தோட்டம். உன் 8:11, நேசருக்கு தோட்டம் ஏசா 5:1.  இயேசுவும் ஒரு தோட்டத்தில் இருந்தார். யோவான் 18:1. அதேபோல் ஒவ்வொரு விசுவாசிகளுக்கும் ஒரு தோட்டம் கொடுக்கப்பட்டுள்ளது. அதை ஜெபித்து நீங்களே தேர்வு செய்யவேண்டும்.

அநேகர் சொல்வார்கள் அதுவும் சபைதானே, அங்கும் பைபிளைத்தானே போதிக்கின்றார்கள். அங்கும் இயேசுவைத்தானே கும்பிடுகிறார்கள். அது உங்களுக்கான தோட்டமா? இல்லையா? என்பதை எப்படி அறிந்துகொள்வீர்கள்?
இன்று சிலர், ஒவ்வொரு சபையாக சென்று மார்க்கம் தப்பி அலைகிற நட்சத்திரம் என்று யூதா கூறுவதுபோல அலைந்து பிறகு எந்த சபையும் சரியில்லை என்று அவர்களாகவே கூற ஆரம்பித்து விடுவார்கள். ஒரு சபையை தேவன் சொல்லாமலே அதைப் பற்றி நியாயந்தீர்க்க ஆரம்பிப்பார்கள். 100 சதவீதம் நல்ல சபையை எதிர்ப்பார்ப்பவர்கள் உடனடியாக இன்றே பரலோகம் செல்லலாம். அதுமாத்திரம்தான் பூரணமானது. அதனால், இந்தப் பூமியில் ஏறத்தாள குறைந்தது 75 சதவீதம் நல்ல சபை எங்கு இருக்கிறது என்று தேடி கண்டுபிடியுங்கள். அந்த சபையில் அங்கத்துவம் வகியுங்கள்.

 

நாம் சபையை மாற்றவேண்டும் என கூறவரவில்லை. இருக்கின்ற சபையில் நம்மை மாற்றுவதுதான் விஷயம். நாம்தான் தேவன் விரும்புகின்ற நபர்களாக மாறவேண்டும். சபை மாறிபோக வேண்டுமென்றால் சில காரியத்திற்காக அதைச் செய்யலாம்:

1. பெண்கள் விஷயத்தில் (பாஸ்டர்கள்) ஊழியன் பாவத்தில் வீழ்ந்துவிட்டால்,

2. ஒரு பாஸ்டர் அளவுக்கு மீறி தன் குடும்பத்திற்கு சொத்துசேர்க்க ஆரம்பித்தால்,

3. பாஸ்டர் தவறான உபதேசத்தை போதித்தால்.

மற்றபடி சிறிய சிறிய விஷயத்திற்குகெல்லாம் அல்லது சின்ன பிரச்சனைக்கெல்லாம் சபையை மாற்றுவது சரியல்ல.

1710801ஆகவே ஆவிக்குரியவன் கர்த்தர் தன் வேலைக்கு அமர்த்தின (தோட்டத்தில்) சபையில் இருந்து வேலை செய்து கூலியை பெற்றுக்கொள்வான். விசுவாசிகளாகிய நாம் யாவருக்கும் ஒருநாள் எல்லோரும் ஓரிடத்தில் ஒரே மேய்ப்பன் இயேசுவின் கீழ் இருக்கபோகிறோம் என்பதை நாம் மறந்துவிடலாகாது.

இயேசுவே நம் எஜமான். திருச்சபையே நம் தோட்டம்.

By தமிழ் கிறிஸ்தவன்

தமிழ் கிறிஸ்தவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *