விசுவாசி! -(BELIEVER) என்பவர், இயேசு கிறிஸ்துவை தன் இருதயத்தில் கர்த்தராகவும், தன் ஆத்துமாவின் இரட்சகராகவும் முழு இருதயத்தாலும் நம்புகிறவர்.
(“விசுவாசி” என்பதற்கான கிரேக்க வார்த்தை – pisteuoo -என்பதாகும்)
விசுவாசிகளுக்கு ஒப்புமையாகக் வேதத்தில் கூறப்பட்டிருக்கிற காரியங்கள்:
- சம்பத்து (மல் 3.17)
- கொழுத்த கன்றுகள் (மல் 4:2)
- சூரியன் (நியா 5:31)
- பொன் (யோபு 23.10)
- கனிதரும் விருட்சம் (சங் 1)
- மான் (சங் 42:1)
- பச்சையான ஒலிவமரம் (சங் 52:8)
- பனைமரம் (சங் 92.12)
- கேதுருமரம் (சங் 92.12)
- நட்சத்திரங்கள் (தானி 12:3)
- கழுகுகள் (ஏசா 40:31; சங் 103:5)
- சீயோன் மலை (சங் 125)
- உப்பு (மத் 5:13)
- வெளிச்சம் (மத் 5:14)
- பட்டணம் (மத் 5:14)
- விளக்கு (மத் 5:14)
- கோதுமை (மத் 3:12-13)
- பாலகர் (மத் 11:25)
- மீன் (மத் 13:48)
- ஊழியக்காரன் (மத் 25.21)
- ஆடு (யோவான் 10; சங் 23)
- கிளை (யோவான் 15)
- ஆட்டுக்குட்டி (யோவான் 21)
- மாளிகை 1கொரி 3:9)
- பந்தயச்சாலையில் ஓடுகிறவர்கள் (1கொரி 9:24)
- சரீரத்தின் அவயவங்கள் (1கொரி 12 )
- நிருபங்கள் (2கொரி 3:1-3)
- ஸ்தானாபதிகள் (2கொரி 5:20)
- தூண்கள் (கலா 2:9; வெளி 3:12)
- போர்ச்சேவகர்கள் (2 தீமோ 2:3)
- மல்யுத்தம் பண்ணுகிறவன் (2 தீமோ 2:5)
- பாத்திரங்கள் (2 தீமோ 2:20)
- ஜீவனுள்ள கற்கள் (1பேதுரு 2:5)
- ஆவிக்கேற்ற மாளிகை (1பேதுரு 2.5)
- அந்நியர்களும், பரதேசிகளும் (1பேதுரு 2:11)
- பிள்ளைகள் (1யோவான் 21,12)
விசுவாசியின் மேன்மை எவ்வளவு என்று பாருங்கள்!
விசுவாசிக்கிறவர்களுக்கு பலன் உண்டு என்றும் வேதம் சொல்கிறதே…
விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாதகாரியம்; ஏனென்றால், தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்கவேண்டும்.
(எபிரெயர் 11:6)
விசுவாசித்து பலனடைவோம்! விசுவாசத்தால் பெலனடைவோம்! ஆமென்!