யூதர்கள் இதுவரை, பல தசாப்தங்களாக யூத சமூகமாக உலகெங்கிலும் பரவி இருந்தாலும், இஸ்ரேல் என்ற நாட்டிற்குள் வர தாமதிக்கின்றனர்.
சிதறடிக்கப்பட்ட யூதர்கள்.
வேதாகமத்தின் உபாகமம் புத்தகத்தில் 28-ம் அதிகாரம் 64-ம் வசனத்தில் சொல்லப்பட்ட தீர்க்கதரிசனமானது அப்படியே யூதர்கள் வாழ்வில் நிறைவேறியது. “கர்த்தர் உன்னைப் பூமியின் ஒரு முனை துவக்கி பூமியின் மறுமுனை மட்டும் இருக்கிற எல்லா ஜனங்களுக்குள்ளும் சிதற அடிப்பார்” என்பதே அந்த தீர்க்கதரிசனம். கிறிஸ்துவுக்கு முன் 1400 ஆண்டளவில் எழுதப்பட்ட இந்த வாக்கு பிற்பாடு பல்வேறு ஆண்டுகளில் பல்வேறு நிகழ்வுகளின் மூலமாக நிறைவேறியது. இது ஏறத்தாள 3400 வருடங்களுக்கு மேலாக தொடருகின்றது.
யூதர்கள் தங்கள் நாட்டை விட்டு வேறு நாடுகளுக்கு எதிரிகளால் துரத்தி அடிக்கப்பட்டனர். இதனை வரலாற்றில் யூத டயஸ்போரா (Jewish Diaspora) என்பார்கள். ஒரு கட்டத்தில் யூதர்கள் இல்லாத நாடே உலக வரை படத்தில் இல்லாத நிலமை இருந்தது. இன்றைக்கும் இஸ்ரேலுக்கு திரும்பிப் போய் மிஞ்சி இருக்கும் யூதர்கள் வட அமெரிக்காவிலும், ரஷ்யாவிலும், உக்ரேனிலும் இருக்கின்றனர்.
யூத தேசம் உருவாகுதல்
1948 மே மாதத்தில், இஸ்ரேல் உருவாகும்போது முதலாவதாக நிறைவேற்றப்பட்ட சட்டமான ‘நாடு திரும்பும் சட்டம்’ உலகம் முழுவதுமுள்ள யூதர்கள் திரும்பிவந்து இஸ்ரேலில் வாழ வழிவகுத்தது.
பல தசாப்தங்களுக்கு பின்பு, முதன்முறையாக, புலம்பெயர்ந்த யூத சமூகத்தை கொண்ட நாடு ஒரு போர்க்களமாக மாறியுள்ளது, பல யூத உயிர்கள் ஆபத்தில் உள்ளன. உக்ரைனில் உள்ள இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட யூதர்கள் இப்போது இஸ்ரேலின் மனிதாபிமான மீட்பு நடவடிக்கைக்காக காத்துக்கொண்டிருக்கிறார்கள்.
உக்ரேன் – ரஷ்ய போர்
2022 மார்ச் மாதத்தில், போரின் முக்கியமான நேரத்தில் இஸ்ரேலின் பிரதம மந்திரி நஃப்தலி பென்னட் ரஷ்யாவின் ஜனாதிபதி விளாடிமிர் வி. புடினை கிரெம்ளினில் சந்திப்பதற்காக மாஸ்கோவிற்குச் சென்றார். சனிக்கிழமை மாலை திரு. புட்டினுடனான சந்திப்பு சுமார் மூன்று மணி நேரம் நீடித்தது. அதன் பின்பு நாடு திரும்பிய பிரதம மந்திரி நஃப்தலி பென்னட் உக்ரைனின் ஜனாதிபதி திரு. வோலோடிமிர் ஜெலென்ஸ்கி உடன் ஒரு மணி நேரத்திற்கு மேல் தொலைபேசியில் தொடர்புகொண்டார். உக்ரேனிய மற்றும் ரஷ்ய அதிகாரிகளின் கூற்றுப்படி, போர் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கும் இரண்டாவது வாரத்தில் இஸ்ரேல் இராஜதந்திர நடவடிக்கையில் ஈடுபட்ட ஒரு அரிய தருணம் இது.
எதிர்பாராதவிதமாக ரஷ்யா உக்கிரேனைச் சுற்றிவளைத்துப் போர்தொடுத்து வருகின்ற இந்த நேரத்திலே, மீகா புத்தகத்தில் 2ம் அதிகாரம் 12ம் வசனம் கூறிய தீர்க்கதாpசனமானது மீண்டும் நிறைவேறுவதை எம் கண்களுக்கு முன்பாக காண்கிறோம். “யாக்கோபின் ஜனங்களே, உங்களெல்லாரையும் நான் நிச்சயமாய்க் கூட்டுவேன், இஸ்ரவேலில் மீதியானவர்களை நிச்சயமாய்ச் சேர்ப்பேன்; போஸ்றாவின் ஆடுகளைப்போல் அவர்களை ஏகக்கூட்டமாக்குவேன்; தன் தொழுவத்துக்குள்ளே சேர்ந்த மந்தைக்குச் சமானமாய் ஜனத்திரளினாலே இரைச்சல் உண்டாகும். இந்த வேத வசனம் என் ஞாபகத்திற்கு வருகின்றது.
யூத உயிர்களை காப்பாற்றுங்கள்
ரஷ்யப் படைகள் உக்ரேனில் முக்கிய நகரங்களைச் சுற்றி வளைத்து வருகின்றது. அதேநேரத்தில், உக்ரைன் ஒரு மனிதாபிமான நெருக்கடியில் தத்தளித்துக் கொண்டிருக்கின்றது. எந்த வகையிலும் யூத உயிர்களைக் காப்பாற்ற வேண்டும் என உலகின் மிகப்பெரிய யூத இலாப நோக்கற்ற அமைப்பான இஸ்ரேலில் யூதர்களின் குடியேற்றத்திற்கான யூத ஏஜென்சி, உக்ரேனிய யூதர்கள் இஸ்ரேலுக்கு குடிபெயர்வதை உறுதி செய்கின்றது. மாசா இஸ்ரேல் ஜர்னி, யூத ஏஜென்சி மற்றும் இஸ்ரேல் அரசாங்கம் இதில் இன்று மும்முரமாயுள்ளது.
ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமித்து ஆயிரக்கணக்கான யூத உயிர்களை ஆபத்தில் ஆழ்த்திய தற்போதைய நெருக்கடியில் இஸ்ரேலிய அரசாங்கம் ரஷ்ய மற்றும் உக்ரேனிய தலைவர்களுடன் நல்ல உறவைப் பேணி வருகின்றது. இது புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள இளம் யூதர்களை ஆழ்ந்த, நீண்ட கால திட்டங்களுக்காக இஸ்ரேலுக்கு கொண்டு வருகிறது.
“எங்கள் முன்னுரிமை அவர்களை விரைவில் இஸ்ரேலுக்கு கொண்டு வர வேண்டும், அதே நேரத்தில் அவர்கள் இங்கு தமது வாழ்க்கையை மாற்றிக்கொள்ள ஆதரவை வழங்குகிறோம்” என மாசாவின் நிறைவேற்று அதிகாரி குட்மன் கூறுகிறார்.
சபத் நாளில் பயணம்
ரஷ்யா தனது இராணுவத் தாக்குதலின் இலக்குகளை விரிவுபடுத்தியது. யூதரான திரு. பென்னட், சனிக்கிழமை ஓய்வுநாள் யூதமத புனித மதத் தடையை மீறி மாஸ்கோ சென்றார். அதாவது அவர் இஸ்ரேலை விட்டு வெளியேறி யூத உயிர்களை காக்க புறப்பட்டார். யூத மதச் சட்டத்தின்படி, சபத் என்ற ஓய்வுநாள் கொள்கையானது மனித உயிரைப் பாதுகாக்கும் கொள்கையால் மீறப்படுகிறது.
திரு. பென்னட் உடன் இஸ்ரேலிய வீட்டு வசதி அமைச்சர் ஜீவ் எல்கின் இருந்தார், அவர் மொழிபெயர்ப்பிற்கு உதவியதாக இஸ்ரேலிய பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. யூதரான திரு. எல்கின், சோவியத் யூனியன் ஒன்றாக இருந்த காலக்கட்டமாகிய 1971 இல் உக்ரைனில் உள்ள கார்கிவ் நகரில் பிறந்தவர், 1990 இல் இஸ்ரேலுக்கு குடிபெயர்ந்தார்.
ரஷ்யாவுடனான பேச்சுவார்த்தை
இஸ்ரேலிய பிரதம மந்திரி திரு. பென்னட் மற்றும் உக்ரைனின் ஜனாதிபதி திரு. வோலோடிமிர் ஜெலென்ஸ்கி ஆகியோர் சமகால உலகின் இரண்டு பெரிய யூத தலைவர்களாக இருக்கின்றார்கள்.
ரஷ்யா அதிபர் புடின் உக்ரைனுடன் யுத்தத்தை அறிவித்தபின்பு, யூதர்களை மீட்பதற்காக, ஜேர்மனியின் அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸைச் சந்திப்பதற்காக பெர்லின் செல்லும் வழியில் திரு. பென்னட் சனிக்கிழமை மாலை மாஸ்கோவிலிருந்து புறப்பட்டார். திரு. பென்னட் உடனான சந்திப்பில், ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையில் மத்தியஸ்தத்தில் இஸ்ரேலின் சாத்தியமான பங்கைப் பற்றி விவாதித்தார். உக்ரைனில் ஏற்பட்ட மோதலின் விளைவாக இஸ்ரேலியர்கள் மற்றும் யூத சமூகங்களின் நிலைமை குறித்து திரு. புட்டினுடன் பேசினார்.
ரஷ்யாவிற்கு ஆதரவான நாடுகள்
சீனாவிடம் இராணுவ மற்றும் பொருளாதார உதவியை ரஷ்யா நாடுகின்றது. இந்தியாவிற்கு பெற்றோல் டீசல் போன்ற எரிபொருளையும் கோதுமையை பண்டமாற்று முறையில் வழங்க விரும்புகின்ற ரஷ்யா ராணுவ ஒத்துழைப்பை கேட்டுள்ளது. இதன்காரணமாக, உலகில் ஸ்திரத்தன்மை மாற்றமடைகின்றது. சீனா, இந்தியா சார்பு நாடுகள் இந்தப் போரினால் ஏற்பட்ட புவிசார் அரசியல் மாற்றங்களிலிருந்து தாம் எவ்விதத்தில் பயனடையலாம் என்று கணக்கிடுகின்றது. இவர்களுடன், சிரியா மற்றும் ஈரானின் ஆதரவும் ரஷ்யாவுக்கு உண்டு.
மேற்குலக நாடுகள்
நேட்டோவில் அங்கம் வகிக்கும் நாடுகளும், அமொpக்கா, கனடா, அவுஸ்ரேலியா போன்ற நாடுகளும் ரஷ்யாவின் இந்த ஒருதலைபட்ச யுத்த நடவடிக்கைகளை ஏற்கனவே கண்டித்து வருகின்ற போதிலும் அவை காத்திரமான நடவடிக்கைகளை வழங்குவதில் பின்நிற்கின்றன. இவர்களது ஒத்துழைப்பை பெறுவதில் உக்ரைன் மிகவும் போராடி வருகின்றது.
யூத மண்ணில் ஒரு ஆயத்தம்
பல தசாப்தங்களுக்கு பின்பு யூத அமைப்பு ஒரு விரிவான சவாலை எதிர்கொகின்றது. வளமான யூத எதிர்காலத்திற்கு அச்சுறுத்தல்களை சுற்றியுள்ள அரபு நாடுகள் ஏற்படுத்தினாலும், இந்த நெருக்கடியான நேரத்திலும் தமது இன மக்களை பாதுகாக்க உரிய நடவடிக்கைகளை இஸ்ரேல் எடுத்து வருகின்றது.
உலக சியோனிஸ்ட் அமைப்பு இஸ்ரேலின் கிராமப்புறங்களில் 1,000 உக்ரேனிய யூதர்களுக்கு கையடக்க வீடுகளை வழங்குவதற்காக இடத்தை செதுக்கி வருகிறது.
சபாத்-லுபாவிச் தரையில் தங்கி உக்ரைனுக்குள் மனிதாபிமான முன்னணியை வழிநடத்துகிறார், அதே நேரத்தில் இஸ்ரேலுக்கு திரும்பி செல்வதற்கான பாதுகாப்பான பாதையை ஏற்பாடு செய்கிறார்.
சுருக்கமாக கூறினால், உலகெங்கிலும் உள்ள யூத அமைப்புகள் தமது மக்களின் மீட்புக்கான செயல்திட்டத்தில் முழு மூச்சாக ஈடுபட்டு வருகின்றனர். உலக யூதர்கள் இதுவரை, பல தசாப்தங்களாக யூத சமூகமாக உலகெங்கிலும் பரவி இருந்தாலும், இஸ்ரேல் என்ற நாட்டிற்குள் வர தாமதிக்கின்றனர். ஆக, உக்ரேன் ரஷ்யா யுத்தத்தின் விளைவாக இரு நாடுகளிலுமிருந்து யூதர்கள் தமது தாயகத்தை நோக்கி திரும்ப ஆயத்தமாகின்றார்கள். உக்ரேனில் மட்டும் இரண்டு லட்சம் யூதர்கள் நாடு திரும்பவுள்ளனர்.
யூதர்கள் எதிர்கொள்ளும் மிகவும் கடினமான நெருக்கடி மிகுந்த இந்நாட்களில் அவர்கள் ஒன்றுபட்டு ஒருங்கிணைந்து செயற்படுகின்றனர். “நெருக்கடி யூதருக்குப் பின்னால் இருந்தாலும் இந்த ஒற்றுமையின் உணர்வு தொடரும்” என்று நாமும் நம்புவோம். இஸ்ரவேலருக்காக மன்றாடுவோம்.