மேய்ப்பர்களும் போதகர்களும் நமக்கு தேவையா என்று யாரும் கேட்பதில்லை. ஏனெனில், இவர்கள் நமது வளர்ச்சிக்கும் பாதுகாப்புக்காகவும் தேவன்தாமே தந்த ஊழியரென்று நாம் அறிந்திருக்கிறோம் (எபே 4: 11-16). இவ்வ+ழியர்கள் பேசுவதைக் கேட்கலா மென்றால் அவர்கள் எழுதுவதை வாசிக்கக்கூடாதோ? மட்டுமல்ல, தேவன் தமது இன்றைய ஊழியர் மூலம் நம்மோடு பேசக்கூடுமானால், தமது அன்றைய ஊழியர் மூலம் பேசமுடியாதோ? ஊழியப்பளு மிகுந்திருந்த தங்கள் காலத்திலும் நேரமெடுத்து தேவ வசன விளக்கவுரைகளை (ஊழஅஅநவெயசநைள) நமக்கு எழுதிவைத்துள்ள வேதப் பண்டிதர்களுக்காகத் தேவனைத் துதிப்போம். அவைகளை நாம் பயன் படுத்தத் தவறினால் நமக்குத்தான் பேரிழப்பு.
பழைய ஏற்பாட்டு வேதம் சீடர்களுக்கு நன்கு தெரிந்திருந்தும், கிறிஸ்து அதை அவர்களுக்கு விளக்கிச் சொல்லும்வரை அது அவர்களுக்குப் புரியவில்லை (லூக் 24:25-27). பாலைவனச்சாலை வழியே இரதத்தில் பயணமாகிக் கொண்டிருந்த வேளையிலும் வாசிக்குமளவு அந்த எத்தியோப்பிய மந்திரி வேதத்தில் விருப்பங்கொண்டிருந்தான். ஆனாலும், ~ஒருவன் எனக்கு விளக்காவிட்டால் அது எனக்கு எப்படிப் புரியும்? என்பதே பிலிப்புவிடம் அவன் கேட்ட கேள்வி (அப் 8: 26-35).
~என்னால் பிரசங்கிக்கப்பட்ட சுவிசேஷம் மனுஷருடைய யோசனையின்படியானதல்ல.. நான் அதை ஒரு மனுஷனால் பெற்றதுமில்லை, மனுஷனால் கற்றதுமில்லை, இயேசுகிறிஸ்துவே அதை எனக்கு வெளிப்படுத்தினார் என்று கலாத்திய விசுவாசிகளுக் குப் பவுல் (கலா 1:11,12) எழுதினான். இவ்வசனத்தை மேற்கோள் காட்டி விசுவாசிகள் சிலர் வேத விளக்கவுரைகளையும் ஆராய்ச்சி நூல்களையும் பயன்படுத்த மறுக்கின்றனர். ஆனால், அந்தக் கலாத்தியர் யாரிடமிருந்து தேவ செய்தியைப் பெற்றனர் தெரியுமா? பவுல் எனப்படும் ஒரு மனிதனிடமிருந்து தானே! (வச 11). தேவ கிருபையின் சுவிசேஷத்தை ய+தருக்கும் புறவினத்தாருக்கும் ஒன்றுபோல் பிரசங்கிக் கும்படி தேவன் பவுலைப் பிரத்தியேகமாகத் தெரிந் தெடுத்து அவனுக்கு முக்கியமான வெளிப்பாட்டைத் தந்தார். எல்லோருக்கும் இவ்விதத் தனிப்பட்ட, நேரடி வெளிப்பாடு தரப்படுவதில்லை. தன்னிடம் கற்றதையே மற்றவர்களுக்குத் தலைமுறை தலைமுறையாய்க் கடத்தும்படித் தீமோத்தேயுவுக்குப் பவுல் கட்டளை இட்டான் (2 தீமோ 2:2).
தவறாக மேற்கோள் காட்டப்படும் இன்னொரு வசனம் 1 யோவா 2:27 ~ஒருவரும் உங்களுக்குப் போதிக்க வேண்டியதில்லை ஆனால், 26ம் வசனத்தை நோக்குங்கால் நல்ல போதகர்களைக் குறித்தல்ல, வஞ்சிக்கிற போதகர்களைக் குறித்தே அப்போஸ்தலன் இங்கு எழுதுகிறான் என்பது தெளிவாகிறது.
தாங்கள் பிரசங்கிப்பதும் போதிப்பதும் யாவுமே தங்கள் சொந்த சரக்கு என மக்கள் எண்ணும் வகையில் சில மேய்ப்பர்களும் போதகர்களும் பேசி விடுகின்றனர். இது சுத்த மாய்மாலம். ~மற்றவர்கள் பிரயாசப்பட்டார்கள், அவர்களுடைய பிரயாசத்தின் பலனை நீங்கள் பெற்றீர்கள் (யோவா 4:38). நாம் பயன்படுத்தும் விளக்கவுரைகள், ஆராய்ச்சி நூல்க ளைப் பற்றி தயக்கமின்றி நமது சபையினருக்கு நாம் சொல்லவேண்டும். காலம் போற்றும் உதவி நூல்களை அவர்களுக்கு அறிமுகம் செய்து அவர்களும் பல முள்ளவர்களாக வளர உதவி செய்யவேண்டும். தன்னைவிடத் தனது மகன் அறிவிலும் வளர்த்தியிலும் கூடிவிட்டானென்று உண்மையான தகப்பன் எவனும் அச்சங்கொள்வானா? பள்ளி மாணவன் பெரும்பாலும் வகுப்பறையில் ஆசிரியர் கற்றுக் கொடுப்பதையே சார்ந்திருப்பான். கல்லூரிக்கு வரும்போதோ அவன் பல மணிநேரங்கள் நூலகத்தில் ஆராய்ச்சிப் புத்தகங்களை வாசிப்பதில் செலவிட வேண்டுமல்லவா?
ஆயவவாநற ர்நசெலஇ துயஅநைளழn- குயரளளநவ-டீசழறnஇ யுனயஅ ஊடயசமந ஆகியோரது விளக்கவுரைகள் மிகச் சிறந்தவை. கூடுதல் ஆராய்சித் தகவல்களை உள்ளடக்கிய நவீன கால விளக்கவுரைகள் பலவுமுண்டு.
விளக்கவுரைகள் வைத்திருப்போரும் அதைக் கிரமமாகப் பயன்படுத்துவதில்லை என்பது இன்னொரு துக்கமான காரியம். வேதத்தை நீங்கள் தனித்துத் தியானிப்பதையடுத்து, தினமும் உங்கள் வியாக்கி யானப் புத்தகத்தில் இரண்டு அல்லது மூன்று பக்கங்கள் முதலிலிருந்து வாசிக்கும்படி உங்களுக்கு ஆலோசனை கூறுகிறேன். அவ்விதம் செய்வது சத்தியம் வெகுவாய்ப் புரட்டப்படும் இந்நாட்களில் உங்கள் வசன அறிவையும் பிடிப்பையும் பலப்படுத்தும்.
