கிறிஸ்தவ இரட்சிப்பின் கோட்பாட்டை இந்து மத கோட்பாட்டுடன் ஒப்பிடுதல்
முழு வேதாகமத்திலும் இருதயமாக கருதப்படுவது இரட்சிப்பேயாகும். தகுதியற்ற அல்லது காணாமற்போன ஒரு மனுஷனுடைய பாவத்தோடு சம்பந்தப்பட்ட எல்லாவற்றிலுமிருந்து அவனைக் காப்பாற்றும் தேவனுடைய உன்னத கிரியையே இரட்சிப்பு.
• இது முற்றும் முழுவதுமாக கர்த்தருடையதாகும். (யோனா 2:9)
• இரட்சிப்பை மனிதன் எவ்விதமான கிரியைகளைச் செய்தும் பெறமுடியாது. (ரோம 3:20, 4:16, எபே 2:8-10)
• இரட்சிப்பு என்ற சொல் வெறும் பாவமன்னிப்பை மட்டும் கூறாமல், நீதிமானாகுதல், மறுபிறப்படைதல், வரப்போகும் உயிர்த்தெழுதல், மகிமையடைதல் போன்ற காரியங்களை உள்ளடக்கிய தொடர்ச்சியான காரியமாகும்.
• பாவமாகிய குற்ற உணர்விலிருந்தும் தினந்தோறும் தினந்தோறும் பாவத்தின் வல்லமையிலிருந்து விடுதலையடைந்து பரிசுத்தமடைதலும் பாவத்தின் சமூகத்திலிருந்து மீட்கப்பட்டு மகிமையடைதலையும் இரட்சிப்பு தன்னகத்தே கொண்டுள்ளது.
• இரட்சிப்பைக் கொடுப்பதற்காகவே தேவன் ப+லோகத்திற்கு வந்து பாடுபட்டு மரித்து அடக்கம்பண்ணப்பட்டு உயிர்த்தெழுந்தார்.
ஆனால்; இந்து மதப் போதனைகள் முற்றும் முழுமையாக மனிதனின் பகுதியையேக் கொண்டுள்ளது. மோட்சம் அடைதல் மாத்திரம்தான் அவர்களின் எதிர்பார்ப்பு. நன்மை செய்தால் நல்லது கிடைக்கும். தீமை செய்தால் தீமை கிடைக்கும் என்று சொல்வார்கள். ஆனால் இந்த மோட்சமடைதலைப் பற்றி இந்து சமயங்களில் எப்பொழுதும் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை. (மோட்சம் – முக்தி).
இந்துக்களின் கோட்பாட்டின்படி இரட்சிப்பை அடைவதற்கு மூன்று வழிகளை அவர்கள் கைக்கொள்ள வேண்டும்.
1. ஞானமார்க்கம்.
2. கிரியை மார்க்கம்
3. பக்தி மார்க்கம்
1. ஞான மார்க்கம்.
அரசியல், ஆவிக்குரிய விடுதலையைக் கருதாமல் அறியாமையிலிருந்து விடுதலை பெறுவதையே இது முக்கியமாகக் கருதுகின்றது. ஒரு மனிதன் தனது அறியாமையினால் சம்சார உலகில் அல்லது மாயமான நாம ரூப உலகிலிருந்து விடுதலை பெற முடியாது என்கிறார்கள். தியானத்தினாலும் யோகத்தைக் கடைபிடிப்பதினாலும் ஓம் என்ற மந்திரத்தை உச்சரிப்பதினாலும் விசேஷ அறிவைப் பெறுகிறார்களாம். கீதை, வேதங்கள், புராணங்களை வாசிக்கவேண்டும். வாசித்து அறிவைப் பெறல்வேண்டும். அப்போதே மறுபிறப்பிலிருந்து விடுதலை கிடைக்கும்.
2. கிரியை மார்க்கம்
உலகில் வாழும்போது நற்கிரியைகள் செய்ய வேண்டும். தான தர்மங்களைக் கடைபிடித்தல், யாத்திரை செல்லுதல், உபவாசங்களைச் செய்தல், மந்திரங்களை உச்சரித்துக்கொண்டிருத்தல் போன்றன இதில் அடங்கும். துறவர வாழ்வை இது ஆதரிக்கின்றது. கிரியையின் மூலமே விடுதலை அடைவான் என்கிறது கீதை.
3. பக்தி மார்க்கம்.
விசுவாசம், தியானம் வாழ்க்கையினால் வருகின்றது. தினமும் ராமாயணம் கீதையை வாசித்து ராமனை நோக்கி ஜெபம் செய்யவேண்டும். பக்தியினாலேயே மனிதன் என்னை அறியவும் பார்க்கவும் முடியும் என்று கிருஷ்ணன் கூறியுள்ளான். எப்போதும் தரிசனம் காணவேண்டும் என்றும் பக்திமார்க்கம் கூறுகின்றது.
இப்படியாக முற்றும் முழுவதுமாக கிரியையில் நம்பிக்கை கொண்டுள்ளது மாத்திரமின்றி இரட்சிப்பு என்பது பாய்ந்தோடிவரும் ஆறுகள் கடலினைச் சேர்ந்து கலந்து மறைவதைப் போன்று ஞானியர் தங்கள் பெயர், வடிவம் ஆகியவற்றினின்றும் விடுபட்டு அனைத்திற்கும் மேம்பட்ட ஆளுமைக்கொண்ட இறைவனைச் சென்றுவிடுகின்றன. என முண்டக உபநிடதம் கூறுகின்றது.
எனவே சுருக்கக்கூறின், இந்துமதங்கள் கிரியையின் மூலம் இரட்சிப்பு என்று கூறும்போது கிறிஸ்தவ இரட்சிப்பின் கோட்பாடுகள் எல்லாம் தேவனின் கிருபையினால் கிரியையினால் மட்டுமே என்று எமக்குக் கூறுகின்றது. மனிதன் கீழ்ப்படியாமையினால் பாவம் செய்தபோதும், உலகம் தோன்றமுதலே தேவன் இரட்சிப்பின் திட்டத்தை வைத்திருந்தார்.