கிருபை என்பது என்ன?
தேவனுடைய தன்மைகளில் ஒன்று அவர் கிருபை உள்ளவர் என்பதாகும். “கிருபை” என்றால் “தகுதியற்றவர்களுக்கு தேவனால் அருளப்படும் ஈவு” என்று பொருளாகும். அதாவது தகுதியற்றவனுக்கு கொடுக்கப்படும் ஈவு. அதைப்போல தேவன் தகுதியற்றவர்களுக்கு கொடுக்கும் ஈவுதான் கிருபை.
ஐசுவரியவானாய் இருந்த நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நமக்காக தரித்திரராய் மாறினார் இதைதான் கிருபை என்று சொல்லுகிறோம். [ சுய நலமற்ற அன்பு ] 2கொரி 8:9. கிருபை என்பது தகுதியற்ற நமக்கு இறைவன் தமது தகுதியை தந்து நம்மை நரகத்திற்கும் மரணத்திற்கும் சாத்தானிடமிருந்தும் பாவத்திலிருந்தம் காப்பாற்றுவதாகும். மலைகள் விலகினாலும் பர்வதங்கள் நிலைபெயர்ந்தாலும் என் கிருபை உன்னை விட்டு விலகாமலும் என் சமாதானத்தின் உடன்படிக்கை நிலையெயராமலும் இருக்கும் என்று உன்மேல் மனதுருகுகிற கர்த்தர் சொல்லுகிறார். ஏசாயா 54:10.
கிருபையைக் குறித்து வேதம் என்ன சொல்லுகிறது?
இயேசு கிறிஸ்துவின் கிருபை நமக்கு ரொம்ப முக்கியம். நாம் நிர்மூலமாகாதிருக்கிறது கர்த்தருடைய கிருபையே மேலும் பாவத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிற நாம் மெய்யான இரட்சிப்புக்குள்ளாக கடந்து வர வேண்டுமானால் கர்த்தருடைய கிருபை மிகவும் அவசியம். மோசே “கர்த்தாவே நான் உம்முடைய மகிமையைக் காண வேண்டும்“ என்றார்.
யார் யார் தேவ கிருபையை பெற்றுக் கொள்கிறார்கள்?
1. கர்த்தரோடு சஞ்சரிக்கிறவர்கள் [ உலகத்தை விட்டு வெளியேறும் போது ] தேவ கிருபையை பெற முடியும்.
2. தேவனுடைய வார்த்தையை இருதயத்தில் சுமக்கிறவர்கள் [ யோசுவா 1:5,8 ] தேவ கிருபையை பெற முடியும்.
தேவ கிருபை வேண்டுமானால் நமக்கு கர்த்தருடைய வார்த்தையாகிய சத்தியம் தேவைப்படுகிறது.
- கர்த்தருடைய முகத்தை தேடும் போது தேவ கிருபையை பெற முடியும்.
கிருபையைப் பார்க்க வேண்டுமானால் தான் கர்த்தருடைய முகத்தை நோக்கிப் பார்க்க வேண்டும். என்பதை நன்றாக புரிந்து கொண்டார்.
- நீதிமானும் உத்தமனுமாயிருக்கும் போது தேவ கிருபையை பெற முடியும்.
வேதம் சொல்லுகிறது, நோவாவுக்கோ கர்த்தருடைய கண்களில் கிருபை கிடைத்தது. ஆதி 6:8.
5. ஜெபிக்கும்போது தேவ கிருபையை பெற முடியும்.
கர்த்தர் தம்முடைய சாயலை எந்த ஒரு மனுஷனுக்கும் அந்த நாட்களில் காண்பித்ததில்லை. ஆனால் மோசே போன்ற தேவ மனுஷர்கள் கர்த்தருடைய சாயலைக் கண்டு மகிழ்ந்தனர். எனவே இப்படிப்பட்ட மகத்தான கிருபையை பெற்றுக் கொள்ளும்படியாக நாம் ஒவ்வொருவரும் ஜெபிக்க வேண்டும்.
6. தாழ்மையுள்ளவர்களுக்கு கிருபை அளிக்கிறார்
வேதம் சொல்லுகிறது, தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபையளிக்கிறார் – நீதி 3:34
- கர்த்தரைக் குறித்து சாட்சிக் கொடுக்கும்போது தேவ கிருபையை பெற முடியும்.
வேதம் சொல்லுகிறது, கர்த்தராகிய இயேசுவின் உயிர்த்தெழுதலைக் குறித்து அப்போஸ்தலர்கள் மிகுந்த பலமாய்ச் சாட்சிக் கொடுத்தார்கள் அவர்களெல்லார் மேலும் பூரண கிருபை உண்டாயிருந்தது.. அப்போஸ்தலர் 4:33.
எனக்குப் பிரியமான தேவ ஜனங்களே கர்த்தருடைய கிருபை நமக்கு கிடைக்கவில்லை என்றால் நாம் நிச்சயமாக நித்திய ஜீவனுக்குள்ளாக பிரவேசிக்கும் சிலாக்கியத்தை இழந்து விடுவோம் என்பதை மறந்து விடாதீர்கள்.
கர்த்தருடைய கிருபை நம்மிடத்தில் இருக்குமானால் நாம் நம்மை குறித்து மேன்மைப்பாராட்டாமல் கிறிஸ்துவை குறித்து மாத்திரமே மேன்மை பாராட்டுவோம்.
“கிருபை” பாடல்… >>> https://www.facebook.com/GoodNewsDailytamil/videos/788746048576327