⌛️மரணத் தருவாயில் மாவீரன் மகா அலெக்ஸாண்டர் தனது தளபதிகளை அழைத்து தனது இறுதி ஆசையாக மூன்று விருப்பங்களைக் கூறுகிறார்.

🔔 “என்னுடைய சவப்பெட்டியை தலை சிறந்த மருத்துவர்கள்தான் தூக்கிக் கொண்டு செல்ல வேண்டும் !”

🔔🔔 “நான் இதுவரை சேர்த்த பணம், தங்கம், விலை உயர்ந்த கற்கள் போன்றவைகளை என்னுடைய இறுதி ஊர்வலத்தின் பாதையில் தூவிக்கொண்டு செல்ல வேண்டும்.!”

🔔🔔🔔 “என் கைகளை சவப்பெட்டியின் வெளியில் தொங்கிக்கொண்டு வரும்படி செய்ய வேண்டும்.!”

👮தளபதிகளில் ஒருவர் அலெக்ஸாண்டரின் அசாதாரண விருப்பத்தால் மிகவும் ஆச்சரியப்பட்டு அதனை விவரிக்கும்படி கேட்டார்.

⌛️அதற்கு அலெக்ஸாண்டரின் பதில்கள்தான் மிகவும் முக்கியமானவை.!!

🔔”தலைசிறந்த மருத்துவர்களால்கூட என்னை நோயிலிருந்து காப்பாற்ற முடியாது, சாவை தடுக்க முடியாது என்பதை உலகத்திற்கு தெரியப்படுத்துவதற்காக!”

🔔🔔 “நான் இந்த பூமியில் சேகரித்த. கைப்பற்றிய பொருட்கள் பூமிக்கே சொந்தமானவை என்பதை தெரியப்படுத்துவதற்காக.!”

🔔🔔🔔 “எனது கைகள் காற்றில் அசையும்போது, மக்கள் வெறும் கையுடன் வந்த நான் வெறும் கையுடன் போவதை உணர்ந்து கொள்வார்கள்” என்றார்.

👉 இதுப் புரியாமல் நம்மில் எத்தனை ஆட்டம் ஆர்ப்பாட்டம்….!

உயர்ந்தவன், தாழ்ந்தவன்; ஏழை, பணக்காரன்; என்கிற ஏளன மதிபீடுகள்…

அடுத்தவனின் உயர்வில் பொறாமை, ஒருவரோடோருவர் பகை, உலகையே விழுங்கிவிட ஆசை.

☝🏼️ஒன்றை நினைவில் கொள்வோம்……

👣 “தன் தாயின் கர்ப்பத்திலிருந்து நிர்வாணியாய் வந்தான்; வந்ததுபோலவே நிர்வாணியாய்த் திரும்பப் போவான்; அவன் தன் பிரயாசத்தினால் உண்டான பலனொன்றையும் தன் கையிலே எடுத்துக் கொண்டுபோவதில்லை.” ~ பிரசங்கி 5:15

christawan.com – 0094-771869710

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *