நீங்கள் பிழைக்கும்படிக்குத் தீமையை அல்ல, நன்மையைத் தேடுங்கள்; அப்பொழுது நீங்கள் சொல்லுகிறபடியே சேனைகளின் தேவனாகிய கர்த்தர் உங்களோடே இருப்பார்..ஆமோஸ் 5:14
தீமையை அநுபவிப்பவர்கள் யாரால் தீமை நடந்ததோ அவர்களை ஆசீர்வதிக்கமாட்டார்கள். நம்பியவர்களுக்கு துரோகம் செய்வது தீமை.. மனச்சாட்சிக்கு விரோதமாக செயல்படுவது தீமையை சார்ந்தது. தீமையின் பலனை சந்ததிகள் அநுபவிப்பவர்கள்.
நீங்கள் நன்மையை தேடவேண்டும்.. தீமைக்கு விலகி இருங்கள். உங்களால் எவ்வளவு நன்மை செய்ய முடியுமோ செய்யுங்கள்.. நன்மையை தேடுங்கள்.. நன்மைக்கு நிச்சயம் ஆண்டவர் உங்களுக்கு நல்ல பலன் தருவார். வாழ்ந்திருக்கச் செய்வார்..
நீங்கள் செய்கிற நன்மை ஒரு நாளும் வீணாகாது.. மனிதர்கள் நீங்கள் செய்த நன்மையை மறந்துப்போகலாம். உங்களுக்கே தீமை செய்து இருக்கலாம். கவலைப்படாதீங்கள்.. நீங்கள் செய்த நன்மையை ஆண்டவர் மறக்க மாட்டார்..
நீங்கள் நன்மையை தேடும்போது நீங்கள் சொல்லுகிறபடி ஆண்டவர் உங்களோடு இருப்பார். உங்கள் சொல் கேட்கப்படும்.. ஆண்டவர் உங்களோடு இருந்து உங்கள் காரியங்களை வெற்றி அடையச்செய்வார். ஆண்டவரை நம்புங்கள்..!!!