தாம் யார் என்ப‌தை ம‌னித‌ருக்கு வெளிப்படுத்திய‌தில் இயேசு கிறிஸ்து முக்கிய பங்கு வகிக்கின்றார். அவர் தேவனுக்குச் சமமானவர். நிச்சயமாக, கிறிஸ்துவில் ம‌ட்டுமே தேவன் அறிய‌ப்ப‌டுகிறார். ஏனெனில் தேவனின் வார்த்தையாக இயேசு கிறிஸ்துவே இருக்கின்றார்.

இயேசுவே இதனை அறிவித்தார். இயேசுவின் சீடராகிய அப்போஸ்தலர் பிலிப்பு ஒருமுறை தேவனை அறிய விரும்பினார். அதற்கு இயேசு,

பிலிப்புவே, இவ்வளவுகாலம் நான் உங்களுடனேகூட இருந்தும் நீ என்னை அறியவில்லையா என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்; அப்படியிருக்க, பிதாவை எங்களுக்குக் காண்பியும் என்று நீ எப்படி சொல்லுகிறாய்?

நான் பிதாவிலும், பிதா என்னிலும் இருக்கிறதை நீ விசுவாசிக்கிறதில்லையா? நான் உங்களுடனே சொல்லுகிற வசனங்களை என் சுயமாய்ச் சொல்லவில்லை; என்னிடத்தில் வாசமாயிருக்கிற பிதாவானவரே இந்தக் கிரியைகளைச் செய்துவருகிறார்.” என்றார்(யோவான் 14:9-10)

இப்போது நாம் இயேசுவின் வெளிப்பாடினை கடவுளின் ஏனைய வெளிப்பாடுகளுடன் ஒப்பிடுவோம்.

  1. படைப்பு தேவனின் மகிமையை வெளிப்படுத்துகிறது,ஆனால் விக்கிரக ஆராதனைக்காரர்களும், இதர தெய்வங்களை வணங்குகிறவர்களும்(Pagans) கூட இதைச் சொல்கிறார்கள்! இவர்கள், “தேவன்/இறைவன் யார்” என்று அறிந்துகொண்டார்கள் என நாம் கூற முடியுமா? இல்லை, தேவனைப் பற்றி அறிந்துகொள்ள வெறும் இயற்கையை விட அதனினும் மேலானவையும் தேவை (No, they need more than just nature to tell them what God is like).
  2. அற்புதங்கள், ஒரு தீர்க்கதரிசிதேவனிடமிருந்து வந்தவர் என்பதை உறுதி செய்கிறது. ஆனால், கள்ளத் தீர்க்கதரிசனம் உரைப்பவர்களைப் பாருங்கள், அவர்கள் அனேகம் தேவர்கள் உள்ளார்களென்றும், சில வேளைகளில் தாங்க‌ளே தேவர்களென்றும் அறிக்கை செய்கின்றனர்! இந்துக்கள் மற்றும் புத்த மதத்தினரின் தீர்க்கதரிசிகள், அற்புதங்க‌ள் செய்து, நம்பாதவர்களைக் கூட ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றனர். ஆனால், இத்தகைய அதிசயங்கள் தேவனைப் புரிந்துகொள்ளப் போதுமானவையா? இல்லை, நமக்கு அற்புதங்களைக் காட்டிலும் அதிகம் தேவை.
  3. வேதாகமம் – தீர்க்கத்தரிசிகளின் மற்றும் தூதர்களின் செய்திகளின் தொகுப்பாகும். அது எள்ளளவும் தவறே இல்லாத, தவறவே முடியாத தேவனின் வார்த்தையாகும். இயேசு கிறிஸ்துவில் தேவனின் வெளிப்பாடு அது. முழு பைபிளும் தேவனைப் பற்றிப் பேசுவதாகவே இயேசு போதித்தார். “வேத வாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; … என்னைக்குறித்துச் சாட்சி கொடுக்கிறவைகளும் அவைகளே“(யோவான் 5:39), பைபிள் ந‌ம‌து புரிந்து கொள்ளுத‌லின் முடிவ‌ல்ல‌. அது ஒரு ஆர‌ம்ப‌ இட‌மே, அதாவ‌து, அது இயேசு கிறிஸ்துவை நோக்கிச் சுட்டிக்காட்டும் ஓர் கைகாட்டி. எனினும், ந‌ம்முடைய‌ ம‌னித‌ மூளையினால், மிக‌வும் ப‌க்தியோடும், அதிக‌ அக்க‌ரையோடும் நாம் என்ன‌ தான் ஆராய்ச்சி செய்தாலும், தேவ‌னைப் ப‌ற்றி முழுவ‌துமாக‌ நாம் அறிந்துக் கொள்ள‌முடியாது(Yet our human minds cannot discover God by any investigation of a book, no matter how devout, serious or religiously committed that investigation is). எனவே, தேவ ஆவியின் (ruh-allah) மூலம் இயேசு கிறிஸ்துவை பைபிளின் வார்த்தைகளில் நாம் கண்டுபிடிக்கிறோம்.

இது சிலருக்குக் குழப்பமாகத் தோன்றலாம்; அல்லது பயமுறுத்துவது போன்றும் இருக்கலாம். இவ்வுண்மையை அவர்களுக்கு புரிய வைக்க முற்பட வேண்டும். சரி, இயேசு கிறிஸ்துவைக் குறித்து புனித வேதாகமம் என்ன கூறுகின்றது என்பதை அறிந்துகொள்ள இன்றே வேத வாக்கியங்களை வாசிக்கத் தொடங்குவீர்களா? https://christawan.com பக்கம் எதிர்பார்ப்பது இதனைத்தான்! நன்றி

Jesus Christ, the Word of God.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *