நமது தவறுகளையும் குறைவுகளையும்
வேதத்தின் வெளிச்சத்தில் தான்
இனம் காண முடியும்.
அந்த வெளிச்சத்தில்
உங்களை ஆராய்ந்து
சுத்திகரித்து கொள்ள வேண்டும்.
வேண்டாத குப்பைகளை
உங்கள் வாழ்விலிருந்து அகற்றுங்கள்.
நமது தவறுகளும் குறைவுகளையும்
நாம் எவ்வளவு குறைத்துக் கொள்கின்றோமோ
அவ்வளவு நாம்
நம்மை பரிசுத்தத்தில் காத்துக்கொள்ளலாம்.
நமது தவறுகளையும் குறைவுகளையும்
இயேசு கிறிஸ்து மன்னித்து
அவருடைய கிருபையினால்
நம்மை பூரண மனிதராக்க விரும்புகின்றார்.
நாம் செய்ய வேண்டியதெல்லாம்
அவருடைய சமுகத்திற்கு செல்வதே.
(இ. இ. வஷ்னீ ஏனர்ஸ்ட்)