கிறிஸ்தவனே இது உனக்குத்தான்!

அநேக கிறிஸ்தவர்கள் பணம் சேமிப்பதைக் குறித்து மாத்திரமே சிந்திக்கிறார்கள். உண்மை என்ன ?

வருமானத்தில் நீங்கள் செலவு செய்யப்படாத தொகை ‘சேமிப்பு‘. இது எழுதப்படாத உண்மை என்று நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று.

 

நீங்கள் வாங்கிய சம்பளத்தில் 10 சதவீத தொகையை மிச்சப்படுத்தியதும் சேமிப்புதான், வீடுகளில் அம்மாக்கள் பருப்பு டப்பா, அரிசி மூட்டை எனப் பல இடங்களில் யாருக்கும் தெரியாமல் வைப்பதிருப்பதும் சேமிப்புதான்.

ஆனால் இன்றைய காலங்களில் சேமிப்பு என்பது, நீண்ட காலத்திற்குப் பணத்தின் வாயிலாக மட்டுமே இருக்கக் கூடாது என்பதை நாம் பணமதிப்பிழப்புச் செய்யப்பட்ட காலத்தில் உணர்ந்திருப்போம்.

உண்மையாகவே பணத்திற்கு நிலையான ஒரு மதிப்பு இல்லை பணவீக்கத்தால் அதன் மதிப்பு தொடர்ந்து மாறுபட்டுக் கொண்டே இருக்கும். பலபேருக்கு இது தெரியாத காரணத்தினால், பலர் வெறும் ரூபாய் வாயிலான சேமிப்பின் மூலம் மிகப்பெரிய அளவிலான பணத்தை இழந்து வருகின்றனர்.

சேமிப்பு அளவின் மாற்றம்… 1984ஆம் ஆண்டு நீங்கள் 1 லட்சம் ரூபாய் சேமிப்பு வைத்திருந்தால் பணவீக்கத்தின் காரணமாகத் தற்போது அதன் மதிப்பு சரிந்து வெறும் 7,451 ரூபாயாகக் குறைந்துள்ளது.

பொருட்களின் விலை உயர்வால் கடந்த வருடம் 100 ரூபாய் மதிப்பு இந்த வருடம் 10 அல்லது 20 ரூபாயாகக் கூடக் குறையலாம். பணவீக்கம் மெல்ல மெல்ல நம்முடை சேமிப்பைக் கரைக்கிறது

போதிய புரிதல்.. மக்கள் மத்தியில் சேமிப்பு மற்றும் முதலீடு குறித்துப் போதிய அளவிலான புரிதல் இல்லாததே இத்தகைய நிலைக்கு முக்கியக் காரணம் என்று முதலீட்டு வல்லுனர்கள் கூறுகிறார்கள்.

உதாரணம் வங்கியில் 1 லட்சம் ரூபாயை டெபாசிட் செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். இந்த டெபாசிட்-க்கு வருடத்திற்கு 7 சதவீத வட்டி (கூட்டு வட்டி).. இதே நிலையில் இந்தியாவில் விலை நிலையும் 7 சதவீதம் உயந்தால் உங்களின் லாபம் எதுவுமில்லை. ஆம், 10 வருடத்திற்கான இந்த டெபாசிட் முடியும் போது உங்களுக்கு 2.16 லட்சம் ரூபாய் கிடைக்கும்.

விலை நிலை… இந்த 10 வருட காலத்தில் விலை நிலையும் உயர்ந்துள்ள காரணத்தால் 10 வருடத்திற்கு முன் 1 லட்சம் ரூபாய்க்கு வாங்கிய அதே பொருளை அதே அளவில் 10 வருடத்திற்குப் பின் 2.16 லட்ச ரூபாய்க்கு வாங்குவீர்கள். இதுதான் பணவீக்கத்தின் வெளிப்பாடு.

எதிர்காலத் தேவை.. தற்போதைய நிலையில் 25 வயதுடைய உங்களுக்கு மாதத்திற்கு 50,000 ரூபாய் தேவைப்பட்டால், உங்களின் 40 வயதில் மாத செலவு 2.5 லட்சமும், 80 வயதில் 10 லட்சமும் தேவைப்படுமானாலும் ஆச்சரியப்படுவதற்கு ஏதுமில்லை.

சரியான யோசனை இந்நிலையில் விலைவாசி நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், எதிர்காலத்தின் தேவையை உணர்ந்து சேமிப்பு, வங்கி டெபாசிட் ஆக மட்டும் அல்லாமல் லாபம் தரும் திட்டங்களைத் தேர்வு செய்து முதலீடு செய்து அதிக லாபத்தைப் பெறுங்கள். இதன் வாயிலாக மட்டுமே நம்முடை நிதிதேவையை எளிதாகப் பூர்த்திச் செய்ய முடியும். இல்லையெனில் நீங்கள் கஷ்டப்பட்டுச் சம்பாதித்த பணம் அனைத்தும் காற்றில் கரைந்துவிடும்.

இன்றே சிந்தியுங்கள். உங்கள் பணத்தில் தேவனுக்கு உரியதை தேவனுக்கு செலுத்திவிடுங்கள். உங்கள் எதிர்காலம் அவரது கைகளில் நிச்சயம் பாதுகாப்பாக இருக்கும். அதே நேரத்தில் அளவுக்கு மீறி பணத்தை வங்கிகளில் முதலீடு செய்து முட்டாளாகி விடாதபடிக்கு முன்னேற்றம் தரத்தக்க லாபம் தரும் திட்டங்களைத் தேர்வு செய்து முதலீடு செய்யுங்கள்!!!

உங்கள் கைகளின் பிரயாசத்தை ஆண்டவர் தாமே ஆசீர்வதிப்பாராக!!!

By I I

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *