ஏற்றகாலங்களிலே நம்முடைய இரட்சகராகிய தேவனுடைய கட்டளையின்படி எனக்கு ஒப்புவிக்கப்பட்ட பிரசங்கத்தினாலே தமது வார்த்தையை வெளிப்படுத்தினார். நீ குறைவாயிருக்கிறவைகளை ஒழுங்குபடுத்தும்படிக்கும், நான் உனக்குக் கட்டளையிட்டபடியே, பட்டணங்கள்தோறும் மூப்பரை ஏற்படுத்தும்படிக்கும், உன்னைக் கீரேத்தா தீவிலே விட்டு வந்தேனே. (தீத்து 1:4-5).
ஆரம்ப வசனத்திலே, அப்போஸ்தலனாகிய பவுல், தீத்துவுக்கு எழுதும்போது கீரேத்தா தீவிலே ஏற்படுத்திய ஒழுங்கை கூறுகிறார். தேவன் ஒரு ஒழுங்கின் ஆண்டவர்.
வேத வாக்கியங்களைப் பார்க்கும்போது, ஆண்டவருக்கு ஒரு ஒழுங்கு எவ்வளவு முக்கியமானது என்பதைக் கண்டறியலாம். அவர் ஒழுக்கமின்மையை கொண்டவரல்ல. ஒழுங்கில்லாமல் போனதினால் தேவனுடைய மாறுத்தரவைக் குறித்த பல தகவல்களை நாம் வேதாகமத்தில் ஏராளமாகக் காணலாம்.
ஒரு கிறிஸ்தவனாக, உங்கள் வாழ்வில் தேவனுடைய கிருபை பெருகுவதை காண வேண்டும். அதற்கு உங்கள் வாழ்வில் ஒழுங்கு மிக முக்கியமானது. உங்கள் இருதயத்திலும் ஒழுங்கு காணப்பட வேண்டும்.
முதலாவதாக, தனிப்பட்ட நபராக உங்கள் வாழ்வில் ஒழுங்கை ஏற்படுத்துங்கள். செய்வதை ஒழுங்காக செய்யுங்கள். சிலவேளைகளில் நாம் மக்களிடம், ‘தேவனை முதன்மைப்படுத்துங்கள்’ என கூறுவதுண்டு. அதன் அர்த்தத்தை சிலர் அறிவதில்லை. தேவனை முதன்மைப்படுத்துதல் என்பது அவருடைய வசனத்தை முதன்மைப்படுத்துவதாகும். தேவன் எண்ணுவது என்ன? அவரது விருப்பம் என்ன? அவரை முன் நிறுத்துங்கள். அதுதான் ஒழுங்கு.
மேலும், ஜெபிப்பதற்கு முதலிடம் கொடுத்து தேவ வசனத்தை வாழ்வில் கற்றுக்கொள்ளுங்கள். அதுதான் ஒழுங்கு. புதிய வருடம் ஆரம்பமாகும்போது பலருக்கு பலவிதமான எதிர்பார்ப்புக்கள் உண்டு. வருடம் ஆரம்பமாக முதலே, அதன் தொடக்கத்திலேயே எதிர்பார்ப்பு இருக்கும். எம்மிடம் அப்படி இருக்கலாம். எனினும், வருடத்தின் முடிவிலே, ஆவியானவர் தாமே உங்களைப் பார்த்து, நீ யாவற்றையும் ஒழுங்காக செய்து முடித்தாய் என்று சாட்சி பகிரும் அனுபவமே ஆசீர்வாதம்மிக்கது.
தேவனுக்காக கொடுப்பதும் முக்கியமானது. சுவிசேஷத்திற்கான உங்களுடைய நிதி பங்காளத்துவம் மிக அவசியமானது. இவ்வருடத்தில் உங்கள் வாழ்வில் இது எந்த இடத்தை வகிக்கின்றது? சபை கூடுகையைக் குறித்து எப்படி? இவற்றை ஒழுங்குபடுத்தலாமா? உங்கள் வாழ்வில் காரியங்களை ஒழுங்குப்படுத்துவதானது, தேவனுடைய கிருபை அபரிதமாக உங்களுடைய வழிகளில் வருவதை உங்களால் காணமுடியும். தேவனுக்கே மகிமை உண்டாவதாக!