ஒரு பட்டணத்திலே ஒரு நியாயாதிபதி இருந்தான்; அவன் தேவனுக்குப் பயப்படாதவனும் மனுஷரை மதியாதவனுமாயிருந்தான்.
அந்தப் பட்டணத்திலே ஒரு விதவையும் இருந்தாள்; அவள் அவனிடத்தில் போய்: எனக்கும் என் எதிராளிக்கும் இருக்கிற காரியத்தில் எனக்கு நியாயஞ்செய்யவேண்டும் என்று விண்ணப்பம் பண்ணினாள்.
வெகுநாள்வரைக்கும் அவனுக்கு மனதில்லாதிருந்தது. பின்பு அவன்: நான் தேவனுக்குப் பயப்படாமலும் மனுஷரை மதியாமலும் இருந்தும், இந்த விதவை என்னை எப்பொழுதும் தொந்தரவு செய்கிறபடியினால், இவள் அடிக்கடி வந்து என்னை அலட்டாதபடி இவளுக்கு நியாயஞ்செய்யவேண்டும் என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டான்.
ஒரு ஏழை விதவையின் அற்ப விசுவாசம் ஜெபமாக வெளிவந்தது.
இந்த விதவையின் விசுவாசம் நமக்குண்டா?
ஒரு சிறிய தீ….. பெரிய காட்டை கொழுத்தி விடுகின்றது.
ஒரு சிறிய நாவு…. பெரிய விளைவை ஏற்படுத்தி விடுகின்றது.
ஒரு குளத்தில் வீசப்பட்ட ஒரு கல்…. பெரிய அலைவட்டத்தை ஏற்படுத்தி விடுகின்றது.
ஒரு சிறிய விதை….. ஒரு பெரிய விருட்சமாக மரமாக வளருகின்றது.
ஒரு சிறிய விசுவாசம்…. உண்டா?
விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாதகாரியம்.
தேவன் நம்மேல் வைத்திருக்கிற அன்பை நாம் அறிந்து விசுவாசித்திருக்கிறோம்.
தேவன் அன்பாகவே இருக்கிறார்;
அன்பில் நிலைத்திருக்கிறவன் தேவனில் நிலைத்திருக்கிறான்,
தேவனும் அவனில் நிலைத்திருக்கிறார்.I யோவான்4:16