“நான் உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்யாதபடிக்கு, உமது வாக்கை என்னிருதயத்தில் வைத்து வைத்தேன்”.
-(சங்கீதம் 119:11)
ஒவ்வொருவர் கையிலும் ஒவ்வொருவிதமான கருவி உண்டு!
ஒரு ஆசிரியர் சாக்பீஸும் விரலுமாய் இருப்பார்.
மின்சாரத்துறையில் வேலைசெய்பவர் இண்டிகேட்டர் கருவியோடு இருப்பார்.
ஒரு கட்டுமானப் பொறியாளர் அளவீடு செய்யும் டேப்-புடன் இருப்பார்!
பேருந்து நடத்துனர் ”விசில்” வைத்திருப்பார்!
விசுவாசிகளிடம் எப்போதும் இருக்கவேண்டிய கருவி ”பரிசுத்த வேதாகமம்”.
இன்னும் அதிகமாய் அது ”இதயத்தில்” இருக்கும்போதே அதிகமாய் உபயோகப்படுகிறது!
வேதவார்த்தைகள் வீட்டிலோ, ஸ்டிக்கர் வடிவிலோ, நாள்காட்டியிலோ, மொபைலிலோ அல்ல, உள்ளத்தில் உள்ளபோதே அவற்றின் மேன்மை மிகு பலன்களைப் பெற்றுக்கொள்ள ஒருவரால் முடிகிறது!
யாருடைய இருதயத்தில் வேதவார்த்தைகள் இருக்கும்? அதன்படி நடக்கிறவர்கள் இருதயத்தில் தான்!
திருக்குள்ள இருதயங்களை, திருத்தி நடத்துவது, பரிசுத்த வேதமே!
வாழ்க்கை சரியில்லையா? வேதம் ஓர் சரியான வழிகாட்டி!
ஞானம் தேவையா, வேதம் ஒரு சிறந்த குரு!
எல்லாவற்றைப்பார்க்கிலும் ”வார்த்தை” யைத்தான் தேவன் மகிமைப்படுத்தினார்.
மகிமை நிறைந்த வேதவார்த்தை நம் வாழ்வின் ”மையமாக” இருக்கும்போதுதான், முழு வாழ்வும், இன்பமாய் மாறும்! முயற்சிப்போமா? ஆமென்!!!