கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல்
எனை புது மனிதனாக்கியதே!
அவருடன் கல்வாரியில்
பாவ பயம் நீக்கிவிட்டேன்!
கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல்
என் வாழ்வின் அதிசயமே!
அவரது இரத்தத்தினால்
எந்தன் பாவம் கழுவிவிட்டேன்!
கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல்
என்னில் புது நம்பிக்கை வித்திட்டதே!
அவருடைய சிலுவையினால்
என் சுயத்தைச் சாகடித்தேன்!
கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல்
எந்தன் நாளைய நம்பிக்கையே!
அவருடன் கல்வாரியில்
சாப மரணம் வென்றுவிட்டேன்!
கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல்
எந்தன் வாழ்வில் புதுத் திருப்பமே!
அவரது நாமத்திற்காய்
என் தாலந்தை சமர்ப்பித்தேன்!
- (இ. இ. வஷ்னீ ஏனர்ஸ்ட்)
