நான் உங்கள சொல்லவில்லை பா

நாமெல்லாம்
உண்மை கிறிஸ்தவர்கள்…
-ஆனால்-
உள்ளத்துல ஒன்றை வைச்சிக்கிட்டு
வெளியில் ஒன்று பேசுவதில்
நம்மை மிஞ்ச யாராலும் முடியாது ..!
—–<>—–<>——
நாமெல்லாம்
ஜீவனையே கொடுத்த
கிறிஸ்துவை பின்பற்றுபவர்கள்…
-ஆனால்-
கீழே விழுந்தவனை தூக்கிவிடும்படி
யாருக்கும் கை கொடுக்க
நமக்கு மனசே வராது..!
—-<>—-<>——<>——-
நம்ம ஜெப வீடுகளெல்லாம்
ரொம்ப ஆவிக்குரியது…
-ஆனால்-
அங்கே ஜெபத்தை தவிர
மற்ற எல்லாவற்றுக்கும்
முக்கியத்துவம் உண்டு..!
—–<>——<>—–<>——
நம்ம பிள்ளைகளை எல்லாம்
நன்றாக கிறிஸ்தவத்தில்
வளர்த்திருக்கிறோம்….
-ஆனால்-
அவர்களுக்கு கிறிஸ்துவை விட
சினிமாவை நன்றாகவே
தெரிந்திருக்கிறது…!
——-<>——-<>——–
நம்ம ஊழியர் ஐக்கிய கூடுகைகளுக்கு
குறைவே இல்லை….
-ஆனால்-
அங்கே ஐக்கியத்தை மட்டும்
இதுவரை யாரும்
கண்டதே இல்லை..!
——<>——<>———
நம்ம உபதேசம் பேச
ஆரம்பித்துவிட்டால்,
அந்த இமைய மலையே
இமை மூடாது….
-ஆனால்-
நம்ம இதயம் மட்டும்
இமைய மலையை விட
கடினப்பட்டுப் போய் கிடக்கு…!
——<>——<>——–
நமக்குள்ளே M.div, B.D, M.th
படிச்சவங்க
ஏகப்பட்ட பேர் இருக்கோம்…
-ஆனால்-
கனிவாய் பேச அவைகள்
நமக்கு கற்றுத்தரவில்லை..!
——<>——<>——-<>——-
நம்ம நேர்ல பார்க்கும் போது
நல்ல கை குலுக்கி
வாய் கிழிய வாழ்த்து சொல்லுவோம்…
-ஆனால்-
கொஞ்ச தூரம் போன உடனே
விரல் நீட்டி அவனைப் பற்றி
குறை சொல்லுவோம்..!
———<>——–<>——–
நம்ம சபைக்குள்ளே
உமக்காகத்தானே ஐயா -நான்
உயிர் வாழ்கிறேன் ஐயா
என்று
இசையோடு அழகா பாடுவோம்…
-ஆனால்-
பாடி முடிச்சி வெளியே வந்த பின்பு
சுயநலவாத காற்றை
சுதந்திரமா சுவாசிப்போம்..!
——-<>——<>——-
நாமெல்லாம்
கொஞ்சம்கூட வெட்கம்,
மானம், சூடு, சொரனையே
இல்லாம
நம்ம ஊழியத்துக்கு
International Ministries
Global revival Ministries என்று
பெயர் சூட்டி கொள்ளுவோம்…
-ஆனால்-
வருஷத்துல ஒரு முறையாவது
வட இந்தியா சென்று,
அங்கு தியாகமாய் உழைக்கும்
தேவ ஊழியர்களை நேரில் பார்த்து,
விசாரித்து, அவர்களை தட்டிக்கொடுத்து
அவர்களின் தேவைக்கு ஏற்ப
சில உதவிகளை செய்ய
நம்ம மானங்கெட்ட மனசுக்கு
தோனவே தோனாது..!
———<>——–<>———
நம்ம சபைக்குள்ளே
Revival meetings க்கு மட்டும்
குறையே இல்ல…
-ஆனால்-
சபைக்குள்ள revival ஐ மட்டும்
பார்க்கவே முடிவதில்லை,
பிரியாணி வாசனைதான்
சும்மா கும் னு தூக்குது…!
——<>——-<>——-
இன்னும் நெரயா இருக்கு
ஆனால்…

எழுத எனக்கும் நேரமில்லை

வாசிக்க உங்களுக்கும்
நேரம் பத்தாது….

ஒன்றை மட்டும்
கடைசியாகவும்,
கர்த்தருக்கு மகிமையாகவும்,
சொல்லிக் கொள்ளகிறேன்…

மாய்மால கிறிஸ்தவர்கள்
மனமுடைந்து
மண்டியிடும் காலம்
வெக தூரத்தில் இல்லை..!

(நான் எல்லாரையும் சொல்லவில்லை பா
சில நல்ல மனசுகாரங்க
கோவிச்சுகிறாதீங்க பா)

நாம் வாயில் சாட்சி சொல்வதை விட்டு விட்டு, வாழ்க்கையில் சாட்சியாக இருப்போம்…..

இது நம்மை நாமே சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டிய நேரம்…..

மனதில் வலியுடன்…..

Authorதமிழ் கிறிஸ்தவன்

தமிழ் கிறிஸ்தவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *