திருமணம் – அன்பில் நிலைத்திருக்க சில ரகசியங்கள்
(Secrets of staying in love)
சமீபத்தில் ஒரு கிறிஸ்துவ வழக்கறிஞர் ஒருவரை சந்தித்து பேசி கொண்டு இருந்தேன். அப்போது அவர் கூறிய சில விஷயங்கள் மனதுக்கு மிகவும் வருத்தமாக இருந்தது . அவரிடம் வரும் குடும்ப விவாகரத்து வழக்குகளில் அதிகமாக கிறிஸ்துவ குடும்பங்களில் இருந்து தான் வருகிறதாம். அவைகளில் பெரும்பாலானவைகள் சிறிய பிரச்சனைகளால் ஏற்படுகிறதாம்.
அன்பு போதிக்கும் நம் ஆண்டவரின் பிள்ளைகள் ஏன் இப்படி செய்கிறார்கள் ??
கடந்த சந்ததியினர் இப்படி செய்யவில்லையே என்று அந்த வழக்கறிஞர் குறைபட்டுக்கொண்டார். உண்மை என்னவென்றால் இந்த சந்ததியினர்யிடம் அறிவு பெருகி இருக்கிறது , அதிகமாக பணம் சம்பதிகிறார்கள் , நாம் யாருக்கும் தாழ்ந்து போக தேவை இல்லை என்று நினைகிறார்கள் , விட்டுகொடுக்க மறுக்கிறார் கள் அதை பிசாசு பயன்படுத்தி குடும்பங்களை பிரிக்கிறான். கிறிஸ்தவர்களாகிய நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் .
🙋 அன்பில் நிலைத்திருக்க சில ரகசியங்கள்……
🙋 கணவன் – மனைவி இருவரும் அர்பணிப்போடு இருங்கள்!
🙋 உங்கள் மனைவி அல்லது கணவனை குறைகளோடு ஏற்றுகொள்ளுங்கள்!
🙋 உங்களை பற்றி சிந்திபதற்கு முன் உங்கள் கணவன் அல்லது மனைவியை பற்றி சிந்தியுங்கள்!
🙋 உங்கள் இருவருகுமான தனிமையான நேரங்களை உருவாக்குங்கள்!
🙋 முக்கியமாக தேவனை உங்கள் உறவுக்கு மையமாக வையுங்கள்!
🙋 தினமும் சேர்ந்து ஜெபியுங்கள்!
🙋 உங்கள் துணையின் குடுபதினரை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்!
🙋 உங்கள் துணையை வாய்ப்பு கிடைக்கும்போது பாராட்டுங்கள்!
🙋 இருவரும் சேர்ந்து சிரியுங்கள்!
🙋 உண்மையாய் இருங்கள்!
உங்கள் உறவில் சந்தோசத்தை எதிர்பாருங்கள்!
கிறிஸ்துவ வாழ்கையில் குடும்பம் ஒரு முக்கிய அங்கம் அதை சாத்தான் கெடுக்க முயற்சி செய்வான். நாம் கவனமாக தேவனை சார்ந்து இருக்க வேண்டும்.
எபேசியர் 5: 33 : எப்படியும் உங்களிலும் அவனவன் தன்னிடத்தில் அன்புகூருவதுபோல தன் மனைவியினிடத்திலும் அன்புகூரக்கடவன்; மனைவியும் புருஷனிடத்தில் பயபக்தியாயிருக்கக்கடவள்.