ஆதாம் என்ற மூன்றெழுத்து முதல் மனிதன்
ஏவாள் என்ற மூன்றெழுத்து முதல் மாதுவும்
ஏதேன் என்ற மூன்றெழுத்தில் வாசமாகி
பழம் என்ற மூன்றெழுத்திற்கு ஆசைப்பட்டு
சோதனை என்ற மூன்றெழுத்தில் சிக்குண்டு
மீட்பு என்ற மூன்றெழுத்திற்கு அலைந்தோடி
சிலுவை என்ற மூன்றெழுத்தில் விண்ணப்பித்து
அன்பு என்ற மூன்றெழுத்தின் அரவணைப்பால்
ஜெபம் என்ற மூன்றெழுத்தில் சரணடைந்து
வேதம் என்ற மூன்றெழுத்தை நமக்கீந்து
கிருபை என்ற மூன்றெழுத்து புடைசூழ
இயேசு என்ற மூன்றெழுத்தால் ஈர்க்கப்பட்டு
கிரியை என்ற மூன்றெழுத்தின் அற்புதங்கள்
வெற்றி என்ற மூன்றெழுத்தின் மகிழ்ச்சியால்
நன்றி என்ற மூன்றெழுத்து துதிகளோடு
ஆமென் என்ற மூன்றெழுத்தால் முடித்து வைப்பாராக!
நல்ல நண்பன்