மரண அறிவித்தல் பற்றிய தகவல்கள்
இலங்கை தமிழ் கிறிஸ்தவர்களின் இறப்பிற்கான தகவலை உலகமெங்கும் பரந்து வாழும் உங்கள் உறவை சென்றடைய மரண அறிவித்தலை பிரசுரிக்கலாம், அதற்காக இப்பக்கத்தில் விளக்கமாக தகவல்களை தந்துள்ளோம், தேவைப்படின் எம்மை தொடர்பு கொள்ளவும்.
தேவையானவை
⏩ உங்கள் வீட்டு தொலைபேசி இலக்கம்
⏩ உங்கள் முழுப் பெயர்
⏩ இறந்தவரின் புகைப்படம் (இல்லையெனில் பூ படம் பிரசுரிக்கப்படும்)
⏩ முழுவடிவ அறிவித்தலுக்குரிய தகவல்
⏩ பணம் கட்டிய பின் உறுதி செய்த பற்றுச்சீட்டு அல்லது இலக்கம்
எவ்வாறு பணம் செலுத்துவது?
Bank Payment or Western Union ஆகிய வழிகளில் பணத்தை செலுத்த முடியும். Call/whatsapp : 0094-771869710
எவ்வாறு தகவல்கள் அனுப்புவது?
புகைப்படத்தை Scan (ஸ்கான்) செய்து [email protected] என்ற மின்னஞ்சல் வழியாக புகைப்படம், தகவலை அனுப்பி வைக்கலாம். அறிவித்தலை (தகவல்) நீங்களே தட்டச்சு செய்து அனுப்பலாம், இல்லையெனில் ஒரு வெள்ளை நிற பேப்பரில் தெளிவான எழுத்தில் எழுதி அதனை Scan (ஸ்கான்) செய்து மின்னஞ்சலில் அனுப்பி விடலாம்
பிரசுரிக்க தேவைப்படும் நேரம்?
தகவல் தருபவரின் விபரங்கள் பாதுகாப்பு கருதி நாம் உறுதிப்படுத்திய பின்னரே பிரசுரிக்கப்படும். கூடியது நீங்கள் பணம், தகவல், புகைப்படம் ஆகிய அனைத்தும் அனுப்பி எமக்கு கிடைக்கப் பெற்ற நேரத்திலிருந்து 5 மணித்தியாலத்துக்குள் பிரசுரிக்கப்படும்.
திருத்தம் செய்வது எப்படி?
பிரசுரித்த பின்னர் ஏதாவது திருத்தங்கள் இருப்பின் எமக்கு தகவல் தந்த நபர் மட்டுமே திருத்தம் செய்ய தகுதியுடையவர்.
பிரசுரித்த நாட்களை அதிகரிக்க / மீளப் பிரசுரிக்க
அறிவித்தல் காலம் முடிவடைந்திருந்தாலும் அதனை மீளப் பிரசுரிக்கலாம்,
அறிவித்தல் நிறுத்தப்பட்டு இருந்தால் மீளப் பிரசுரிக்க வேண்டுமெனில் பணம் கட்டிய சிறு நேரத்திலையே மீண்டும் பிரசுரிக்கலாம்.
Terms & Conditions
⏩ இலங்கை தமிழ் கிறிஸ்தவர்களின் அறிவித்தலுக்கான தகவல் மட்டுமே அனுமதிக்கப்படும்,
⏩ (அறிவித்தலில் எந்தவொரு விளம்பரமும் அனுமதிக்கப்பட மாட்டாது. இணையத்தள இணைப்பு, மின்னஞ்சல் முகவரியினை கொடுப்பதற்கு அனுமதி இல்லை).
⏩ நீங்கள் வடிவமைத்த அறிவித்தல் எமது தளத்திற்கு பொருத்தமானால் மட்டுமே அதனை ஏற்றுக் கொள்ளப்படும்,
⏩ எமக்கு தகவல் தருபவரின் விபரம் தெளிவற்று இருந்தாலோ, உறுதிசெய்வதில் சிக்கல் இருந்தாலோ அவ்வறிவித்தல் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது
⏩ குறைந்தது ஒருவருடைய தொலைபேசி இலக்கமாவது தகவலுடன் இணைக்கப்பட வேண்டும்
⏩ அறிவித்தல் பக்கத்திலிருந்து அனுதாபச் செய்திகளை தகவல் தருபவரின் மின்னஞ்சலுக்கு அனுப்பப்படும், மாற்றம் செய்வதாயின் அறியத்தரவேண்டும்
⏩ தொழிநுட்பச் சிக்கல் காரணமாக எமது தளம் இயங்குவது தடைப்பட்டாலோ, அறிவித்தல் வேலைசெய்யவில்லை என்றால் அதற்கான நாட்கள் இலவசமாக நீடிக்கப்படும்
⏩ நீங்கள் அனுப்பி பிரசுரித்த அறிவித்தலுக்கு முழுக்க முழுக்க பொறுப்பு உங்களுடையது
⏩ உங்கள் தகவல்களில் சந்தேகமிருப்பின் உங்களை உறுதி செய்ய உங்களை அடையாளப்படுத்த வேண்டிய நிலமை வரலாம். அச்சந்தர்ப்பத்தில் ID Card, Passport Copy, Billing Proof இப்படியான ஆவணங்களை நாம் பெற்றுக்கொள்ளுவோம்
tel: 0094-771869710