தேவ வசனம் தேவனையே எங்களுக்கு வெளிப்படுத்துகின்றது.
1.1. அவர் பரிசுத்தர்
– ஏசாயா 6:1-7 சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர், பூமியனைத்தும் அவருடைய மகிமையால் நிறைந்திருக்கிறது. உங்களை அழைத்தவர் பரிசுத்தராயிருக்கிறதுபோல, நீங்களும் உங்கள் நடக்கைகளெல்லாவற்றிலேயும் பரிசுத்தராயிருங்கள்.நான் பரிசுத்தர், ஆகையால் நீங்களும் பரிசுத்தராயிருங்கள் என்று எழுதியிருக்கிறதே. (1பேது 1:15,16)
1.2 அவர் நீதியுள்ளவர் –
சங்கீதம் 145:17 கர்த்தர் தமது வழிகளிலெல்லாம் நீதியுள்ளவரும், தமது கிரியைகளிலெல்லாம் கிருபையுள்ளவருமாயிருக்கிறார்.
1.3 அவர் அன்புள்ளவர்
– 1யோவான் 4:8-10 அன்பில்லாதவன் தேவனை அறியான், தேவன் அன்பாகவே இருக்கிறார். தம்முடைய ஒரே பேறான குமாரனாலே நாம் பிழைக்கும்படிக்கு தேவன் அவரை இவ்வுலகத்திலே அனுப்பினதினால் தேவன் நம்மேல் வைத்த அன்பு வெளிப்பட்டதுநாம் தேவனிடத்தில் அன்புகூர்ந்ததினால் அல்ல, அவர் நம்மிடத்தில் அன்புகூர்ந்து, நம்முடைய பாவங்களை நிவிர்த்திசெய்கிற கிருபாதாரபலியாகத் தம்முடைய குமாரனை அனுப்பினதினாலே அன்பு உண்டாயிருக்கிறது.
1.4 அவர் எம்மை சிருஷ்டித்தார்
ஆதி 1:26-30 தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார், அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார்; ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார்.
1.5 அவர் எமது தேவைகளை சந்திக்கின்றார்
பிலி 4:19 என் தேவன் தம்முடைய ஐசுவரியத்தின்படி உங்கள் குறைவையெல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே நிறைவாக்குவார்.
1.6 அவர் எமக்கு பரிபூரண ஜீவனைத் தருகின்றார்
யோவான் 10:10 திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான். நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன்.
அன்பானவர்களே தேவ வசனம் தேவனையே எங்களுக்கு வெளிப்படுத்துகின்றது. அவரை அறிந்துகொள்ள தினமும் அந்த வேதவசனங்களை வாசியுங்கள்.
வேதவசனங்களை ஆராய்ந்து பாருங்கள். மனனம் செய்யுங்கள். தியானியுங்கள். அதனை உங்கள் வாழ்வில் பிரயோகியுங்கள்.
நீங்கள் தேவனுடைய சத்தத்தைக் கேட்டு பல நாட்கள் ஆகிவிட்டதா? தேவனோடு பேசுங்கள், வேத வசனங்கள் மூலமாக இயேசுவானவரை வெளிப்படுத்தும் பரிசுத்தாவியானவருக்குச் செவிகொடுங்கள். தேவன் உங்களுக்கு கூறவேண்டிய அதிசயமான காரியங்களுக்கு ஒத்திசைந்து செல்லுங்கள்.