நான் ஒரு கிறிஸ்தவ மனைவி!
நான் ஒரு கிறிஸ்தவ பெண். கணவனுக்கு ஏற்ற மனைவி.
கிறிஸ்துவுக்குள் கீழ்ப்படிந்து வாழ அழைக்கப்பட்ட நான், வேதாகமம் கூறுகின்றபடி என் கணவனுக்கும் கீழ்ப்படிந்து நடப்பேன்.
அதனை ஒரு தாழ்வான காரியமாக எண்ண மாட்டேன்.
கணவனின் மேலாண்மையை நான் அசட்டை செய்யாமல் மதிப்பேன்.
அத்துடன் கணவரின் தோல்விகளிலும், நஷ்டங்களிலும் அவருடைய அணுகுமுறைகளை விமர்சித்து அவரைக் குத்திக் காட்டி மேலும் அவரைச் சோர்ந்துபோகச் செய்ய மாட்டேன்.
அதற்குப் பதிலாக உற்சாக வார்த்தைகளால் அவரையும் குடும்பத்தினரையும் தாங்கி ஊக்குவிக்கவே சிரமப்படுவேன்.
நான் கணவனுக்கு ஏற்ற ஒரு கிறிஸ்தவ மனைவி.
