லண்டன், இந்த பூமியில் அறிவியல் ரீதியாக 3 லட்சத்து 90 ஆயிரத்து 900 தாவரங்கள் இருக்கின்றன என்று அண்மைய கணக்கெடுப்புகள் கூறு கின்றன. இங்குள்ள அரச தாவரவியல் துறை, இந்த புதிய எண்ணிக்கையை வெளியிட்டுள்ளது.
உலகளவிலான தாவரங்கள் பற்றிய முதல் மதிப்பீடு இதுவென கூறப்பட்டது. 2015ஆம் ஆண்டில் இருந்ததைவிட இவ்வாண்டு 2,034 புதிய தாவரங்கள் கண்டு பிடிக்கப்பட்டிருக்கிறது.
இருப்பினும், இந்தத் தாவரங்களில் 21 விழுக்காடு இனங்கள் அழிவை எதிர்நோக்கியுள்ளன. பருவநிலை மாற்றங்கள், வாழ்வாதார இழப்பு, நோய்கள் மற்றும் புதிய இனங்களால் அழிக்கப்படுதல் போன்றவற்றினால் தாவர இனங்களிடையே அழிவு ஏற்பட்டு வருவதாக அரச தாவரயியல் துறை அறிவித்திருக்கிறது.
இந்த மண்ணில் எத்தனை வகை தாவரங்கள் உள்ளன? அவை எங்கெங்கே உள்ளன? இந்த இனங்களுக்கு இடையே எத்தகைய உறவுகள் நிலவுகின்றன? என்பது பற்றி அறிந்துகொள்வது மிக முக்கியமானதாகும். ஏனெனில், நம்முடைய நல்வாழ்வுக்கு தாவரங்கள் மிக முக்கியாமான அடிப்படை என்று அரச தாவரவியல் துறையின் பேராசிரியர் கேத்தி வில்லிஸ் தெரிவித்தார்.