நீதிமான்களோ துளிரைப்போலே தழைப்பார்கள்.. நீதிமொழிகள் 11:28
ஒரு செடியோ, கொடியோடு, மரமோ காய்ந்து செத்த நிலையில் காணப்பட்டாலும் துளிர் விடும் போது அது உயிர் உள்ளதாக காணப்படும்… செழிப்படையும்.
அதன் காய்ந்த நிலை மாறுகிறது… அதில் மறுபடியும் பசுமையை காணமுடியும்..
பலன் இல்லாத நிலை மாறுகிறது… அதற்கு உண்டான பலன் கிடைக்கும்.. தன்னுடைய பழைய நிலைக்கு திரும்புகிறது..
இன்று உங்கள் நிலையானது எல்லாம் முடிந்த நிலையில் இருக்கலாம்.. இலாபமாக இருந்ததெல்லாம் நஷ்டமாக காணப்படலாம்.. வறட்சி, வறுமை, காய்ந்த நிலை இருக்கலாம்… வெட்டுக்கிளி சேதம் உண்டாகலாம். பஞ்சம் தலைவிரித்தாடலாம். ஆனாலும் சோர்ந்து போய் விடாதிருங்கள். நீங்கள் தேய்ந்துபோய் விடுவதில்லை.
நீதிமாய் இருக்கிற நீங்கள் துளிர் விடுவீர்கள்… இழந்த நிலை மறுபடியும் ஆண்டவர் துளிர்க்கப் பண்ணுவார்… முடிந்தது என்று சொன்ன விஷயத்தில் பசும் துளிர் காண்பீர்கள்..
கர்த்தரால் உங்களுக்கு வளர்ச்சி உண்டாகும்… உங்களது வாழ்க்கையை அவர் பசுமையுள்ளதாக மாற்றுவார்..
ஆசீர்வாதங்களை காணச் செய்வார்.. உங்களை துளிர்க்க பண்ணுகிற ஆண்டவரை எல்லாக் காலத்திலும் நம்புங்கள்..!!!! அவரை சார்ந்திருக்கிறவன் பாக்கியவான்.
அன்பானவர்களே, நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். முதலில் ஆண்டவருக்கானதை ஆண்டவருக்கு கொடுத்து பாருங்கள். அவர் உங்களை நிச்சயம் ஆசீர்வதிப்பார்.
ஜெபம்:
ஆண்டவரே, என் வாழ்வில் எல்லாவற்றையும் இழந்த நிலையில் இருக்கிறேன்.. எது எடுத்தாலும் நஷ்டம்.. பொத்தலான பையில் போட்ட நிலை.. ஒருவிசை என்னை நினைத்தருளும்.. எனது வறட்சி நிலையை மாற்றி என்னை துளிர்க்கப்பண்ணும்.. என் பாவ வாழ்வை மாற்றி பரிசுத்தமாக்கும். என் வாழ்வில் பசுமையை காண உதவிச் செய்யும்.. முதற்பலனை உமக்கு நான் செலுத்துவேன். இயேசுவே நிச்சயமாகவே நீர் என் வாழ்வில் கொடுக்கப் போகிற புதிய துவக்கத்திற்கு நன்றி செலுத்துகிறேன்… உம்மையே ஆராதிப்பேன். உம்மையே விசுவாசிக்கிறேன்.. நன்றி …இயேசுவே.. ஆமென்…!!!
சிறு குறிப்பு – நன்கொடை கொடுங்கள்.
இன்னும் பலர் CHRISTAWAN.COM தளத்திற்கூடாக பயனடைய
உங்கள் காணிக்கைக்கூடாக எம்மை தாங்குங்கள். நன்றி.
A/C NAME : E. I. IMMANUEL
ACCOUNT TYPE : Saving
A/C NO : 8500022849
BANK : Commercial
BRANCH : Colombo.