இராபர்ட் கால்டுவெல்

திராவிட மொழியின் தந்தை

பிஷப் இராபர்ட் கால்டுவெல் அவர்கள் பற்றிய முழுமைமான வரலாற்று தகவல்

வேத வசனம் : நீதிமொழிகள் 22:6 பிள்ளையானவன் நடக்கவேண்டிய வழியிலே அவனை நடத்து; அவன் முதிர்வயதிலும் அதை விட்டு விலகாதிருப்பான்

இவருடைய பிறப்பு 1814 கிளாடி, அயர்லாந்து ஏழ்மையான ஸ்காட்டிஷ் பிரஸ்பிடீரியன் குடும்பத்தில் மே 7, 1814-ல் பிறந்தார்

9 வயதில் குடும்ப வறுமையால், வேலை செய்தார்.

இயற்பெயர்: இராபர்ட் கால்டுவெல்
பட்டம்: D.D., LL.D. (டாக்டர் ஆஃப் டிவினிட்டி, டாக்டர் ஆஃப் லாஸ்)
காலம்: மே 7, 1814
ஆகஸ்ட் 28, 1891
(77 ஆண்டுகள்)

இளமைப் பருவம்
(1814-1838)
இவர் ஸ்காட்டிஷ் வம்சாவளியைச் சேர்ந்தவர். கிளாஸ்கோ பல்கலைக்
கழகத்தில் படித்து, 1830-ல் ஓவியராக வேலை செய்தார். பின்பு லண்டனில் இறையியல் படித்து, London Missionary Society (LMS) இல் சேர்ந்தார்.

முக்கிய திருப்பம்
1837-ல் Church Missionary Society-க்கு மாறினார். தமிழகத்திற்கு அனுப்பப்பட்டார்.

தமிழக வருகை & தமிழ் கற்றல் (1838-1841)

ஜனவரி 8, 1838-ல் 24 வயதில் லண்டன் மிஸனெரி சொசைட்டி சார்பாக ஜனவரி – 8 ,1938 (மெட்ராஸ்) சென்னை வந்திறங்கினார்.
பின்னர் S P G -ல் இணைந்தார்

முதல் 3 ஆண்டுகள் சென்னையில் தமிழ், சமஸ்கிருதம் கற்றார்.
தமிழ் அறிஞர் திருநெல்வேலி முத்துசாமி பிள்ளை அவர்களிடம் தமிழ் கற்றார். தமிழில் உள்ள திருக்குறள், நாலடியார், தொல்காப்பியம் ஆகியவற்றை படித்தார்

அவரே சொல்கிறார்: தமிழ் மொழியின் இனிமை என்னை கவர்ந்தது. அது ஒரு, தெய்வீக மொழி போல இருந்தது.

இடையங்குடி 1841-ல் தங்குதல்
நடந்தே வந்த தூரம் 1841 ஜூலையில் ஊட்டியில் இருந்து திருநெல்வேலி வரை நடந்தே வந்த தூரம் 800 மைல் (1300 கி.மீ)
நடந்தே வந்தார்.
5 மாத பயணம்.
(வரும் வழிகளில் எந்தெந்த பிரச்சனைகள் ஏற்ப்பட்டதோ தெரியவில்லை)
திருநெல்வேலி மாவட்டம் இடையங்குடியை
36 வருடங்கள் தலைமையிடமாக கொண்டார்,

சிறு குடிசையில் ஆரம்பம்
17×11 அடி கொண்ட மண் குடிசையில் தங்கினார்.
இரு கைகளையும் விரித்தால்
இரு சுவர்களையும் தொடலாம். அதுதான் இன்று நினைவிடமாக உள்ளது

1844 திருமணம் மிஷனெரி சார்லஸ் மால்ட் மகள்
எலிசா மால்ட் அம்மையாரை மணந்தார்,
7 பிள்ளைகள், எலிசா 40 ஆண்டுகள் தமிழ் பெண்களுக்கு ஊழியம் செய்தார்

தமிழ் பற்று – சுவிசேஷத்தை தாய்மொழியில் சொல்ல தமிழை முறையாக கற்று, தமிழ் ஜெப புத்தகம், வேதாகம திருத்த பணியில் 1858-1869 வரை ஈடுபட்டார்

1856 திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் – A Comparative Grammar of the Dravidian Family என்ற நூலை வெளியிட்டு
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு ஆகியவை சமஸ்கிருதத்திலிருந்து வரவில்லை என நிரூபித்து திராவிட இயக்கத்திற்கு அடித்தளம் அமைத்தார்

திராவிடம்
என்ற சொல்லை
முதன் முதலில் உருவாக்கியவர் இவர்தான்.

திராவிட குடும்பத்தை நிறுவினார்

தொல்பொருள் ஆய்வு 1881
பனை ஓலை சுவடிகள், சங்க இலக்கியம் ஆய்வு செய்து பாண்டியர் கால நாணயங்கள், ஈமத்தாழிகள் கண்டெடுத்து Tinnevelly வரலாறு புத்தகம் எழுதினார்

சுவடி பாதுகாப்பு – தமிழுக்கு செய்த தொண்டு (1840 முதல்)

அக்காலத்தில் பல பழைய தமிழ் ஓலைச்சுவடிகள் வீடுகளில் குப்பையில் கிடந்தன. அவற்றை விலை கொடுத்து வாங்கினார்.

திருக்குறள், தொல்காப்பியம், சிலப்பதிகாரம், மணிமேகலை, புறநானூறு போன்ற 300-க்கும் மேற்பட்ட சுவடிகளை சேகரித்தார். அவற்றை பூச்சி அரிக்காமல் இருக்க மண் கிணற்றில் பானைகளில் வைத்து பாதுகாத்தார். பின்பு அவை Dr. U.V. சாமிநாத ஐயர் போன்றவர்களுக்கு கிடைத்து பதிப்பாக வெளிவந்தன.

பொருளாதாரம் பனைமர தொழிலாளர் களுக்கு கூட்டுறவு சங்கம் அமைத்தார். பனைவெல்லம், பனை நார் ஏற்றுமதி செய்ய வழி செய்தார்.

மருத்துவம்
சிறிய மருத்துவமனை தொடங்கினார். காலரா, அம்மை நோய்க்கு மருத்துவம் பார்த்தார்.

பசுமை புரட்சி
1844 முதல் 150 ஏக்கரில் பனை, தென்னை, மா, பலா மரங்களை நட்டார். இன்று இடையங்குடி ஒரு சோலைவனம் போல உள்ளது அவரால்தான்

ஒடுக்கப் பட்டோரின் நண்பர் சாதி பாகுபாடுகளினால்பறக்கனிக்கப்பட்ட
பறையர்கள், சாணார்கள் (நாடார்கள்) மத்தியில் பள்ளிகள், தேவாலயங்கள் கட்டி சாதி கொடுமைக்கு எதிராக போராடினார், ‘
The Hindu’ நாளிதழ் ஒடுக்கப்பட்டோரின் முன்னோடி என பாராட்டியது

சமூக சீர்திருத்தம் பறையர்
களிடமிருந்து மாதம் எட்டணா கட்டணம் வாங்கினார், ஆனால் 2 தலித் பையன்களிடம் அவர்கள் பெயரளவில் அடிமைகள் சொல்லப்பட்டதால் நாளண மட்டுமே வாங்கி கல்வி கற்றுக் கொடுத்தார்.

ஆனால்,
பெண்கள் கல்விக்காக இவரே தன்னுடைய காசுகளை செலவு செய்து பொரிகடலை, வெல்லம் கொடுத்து பள்ளிக்கு அழைத்தார்.
பெண்களிடம் கல்விகாக கட்டணம் வாங்கவில்லை
கல்வி: 1842-ல் ஆண்கள், பெண்களுக்கு தனித்தனி பள்ளிகள் தொடங்கினார். பெண் கல்வியை வலியுறுத்திய முதல் மிஷனெரி இவர்தான்

தேவாலய கட்டுமானம்: இடையங்குடியில் பரிசுத்த திரித்துவ ஆலயம் கட்ட
33 ஆண்டுகள் (1847-1880) ஆனது. இவரே நிதி திரட்டி, ஆர்கிடெக்ட், மேஸ்திரியாக இருந்தார்

சிறப்புகள்:
முழுக்க முழுக்க கருங்கற்களால் கட்டப்பட்ட கோதிக் பாணி ஆலயம்.
110 அடி உயர கோபுரம்.
இங்கிலாந்தில் இருந்து கண்ணாடிகள், மணிகள் கொண்டு வந்தார்.
தன் சொந்த சம்பள பணத்தில் 40% இதற்கு செலவிட்டார்

பிரதிஷ்டை விழாவில் 8000 பேர் வந்தனர். இதன் கீழ் 40 கிளை சபைகள் உருவானது

1877 பிஷப் பட்டம் திருநெல்வேலியின் துணை பிஷப்பாக அபிஷேகம் செய்யப்பட்டார், கிறிஸ்தவர்கள் எண்ணிக்கை 6000-லிருந்து 1 லட்சமாக உயர்ந்தது

கிறிஸ்தவ பஞ்சாயத்து
இந்திய பஞ்சாயத்து முறையை அடிப்படையாக கொண்டு Christian Municipalities
மற்றும் Nyaya Sabha நீதிமன்றம் அமைத்தார்.

நூல்கள்
1849 The Tinnevelly Shanars
(சாணார்கள் பற்றிய மானிடவியல் நூல்)
1856 திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்
(2-ம் பதிப்பு 1875)
1881 Tinnevelly மாவட்ட அரசியல் மற்றும் பொது வரலாறு

கடைசி நாட்கள்:
1882 வரை குடிசையில் வாழ்ந்து , ஏழை மக்களோடு இருந்து பின்னர், தூத்துக்குடி பிஷப் பங்களாவுக்கு மாறினார்.

மதுரை, ராமநாதபுரம், திருநெல்வேலியில் 1938-ல் எடுத்த ஆய்வில்
நாடார்கள் இல்லாத துறையே இல்லை என்ற நிலைக்கு அவர்கள் உயர காரணமானவர்
என The Hindu பாராட்டியது.

மறைவு
1891 கொடைக்கானல் ஆகஸ்ட் 28, 1891-ல் கொடைக்கானலில் மரித்து, இடையங்குடி பரிசுத்த திரித்துவ ஆலய பலிபீடத்தின் கீழ் அடக்கம் செய்யப்பட்டார்

சிலைகள் & நினைவகங்கள் 1968-ல் சென்னை மெரினா கடற்கரையில் தென்னிந்திய திருச்சபையால் சிலை நிறுவப்பட்டது, தமிழக அரசு நினைவிடம், அஞ்சல் தலை வெளியிட்டது

திராவிடத்தின் தாய் மொழி தமிழே என்ற முழக்கத்திற்கு அடித்தளமிட்டவர்

தமிழரை நேசித்து தமிழரானார், திராவிட மொழிகளை கற்றார்.

அவரே தன் கல்லறையில் திராவிட மொழிகளின் மாணவன் என்று எழுத விரும்பியது போல, நற்சாட்சியுடன் வாழ்ந்து விசுவாசத்தை காத்த கர்த்தருடைய ஊழியராக திகழ்ந்தார்

இவரைப்பற்றி எழுதுவதற்கான வரலாற்றுத் தகவல்கள் இன்னும் அதிகமாகவே இருக்கிறது

வேத வசனம்
1 கொரிந்தியர் 9:22-23
பலரை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கு எல்லாருக்கும் எல்லாமானேன்.. சுவிசேஷத்தினிமித்தம் நான் எல்லாவற்றையும் செய்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *