உண்டு முடித்ததும் இயேசு பேதுருவிடம் “யோவானின் குமாரனான சீமோனே! மற்றவர்கள் நேசிப்பதைவிட என்னை நீ மிகுதியாக நேசிக்கிறாயா?” என்று கேட்டார். அதற்குப் பேதுரு, “ஆம் ஆண்டவரே, நான் நேசிக்கிறேன் என்பது உங்களுக்குத் தெரியும்” என்றான். யோவான் 21:15
தமிழர்களின் கலாச்சாரத்தை, குறிப்பாக இன்றைய நவீன காலகட்டத்தை நான் கவனிக்கும்போது, நம்முடைய அடையாளத்தை நாம் உருவாக்கிக்கொள்ள நாம் எதைச் சார்ந்து நிற்கிறோம் என்று சிந்தித்தபோது அது ஒரு குழப்பமாகவே தோன்றியது. இன்னும் தெளிவாக கூறுவதாயின், நாம் மனிதர்களாக எதில் நம்பிக்கை வைக்கிறோம் என்பதே முக்கியமான ஒரு கேள்வி. வாழ்க்கையின் வெவ்வேறு கட்டங்களில் நாம் நம்பிக்கை வைக்கும் விடயங்கள் மாறிக்கொண்டே இருப்பதுபோலவே தோன்றுகிறது.
நான் பாடசாலையில் கற்ற நாட்களை யோசிக்கின்றேன். அந்நாட்களில் பல்வேறு புத்தகங்களைக் கொண்ட ஒரு நூலகத்தில் அதிக நேரத்தைச் செலவிடுவேன். ஒவ்வொரு மாணவருக்கும் ஏதோவொரு இடம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்த காலகட்டம் அது.” சிலர் உடற்பயிற்சி கூடத்தில், சிலர் மைதானத்தில், சிலர் இசை நிகழ்ச்சிகளில்> சிலர் திரைப்படங்களில் தங்களை மறந்து, நேரம் செலவிடுவார்கள். வாலிப வயதில் தமது மதிப்பையும் தன்னம்பிக்கையையும், உயர்த்திக்கொள்ள ஏதாவது ஒன்றுடன் தொடர்பை வைத்துக்கொள்வதுண்டு.
என்னுடன் ஒரே வகுப்பில் படித்த நண்பனுக்கு மரம் ஏறுவது என்றால் அலாதி பிhpயம். அது அடுத்த தோட்டத்தில் இருந்தால் என்ன, வீதியோரத்தில் உள்ள மரமாக இருந்தால் என்ன, பழத்தைக் கண்டால் ஏறிவிடுவான். ஒருநாள் அப்படியாக அவன் அம்ரெல்லா மரத்தில் ஏறிக்கொண்டான். அந்த வழியே வகுப்பாசிரியர் வருவதைக் கண்டவுடன் நாங்கள் அனைவரும் ஒளிந்துகொண்டோம். அவனோ, தட்டுத்தடுமாறி வேகமாக இறங்கியதால் அவனுடைய காற்சட்டை கிழிந்துவிட்டது. இது மரம் ஏறும் அவனுடைய ஆர்வத்தில் பொpய பாதிப்பை ஏற்படுத்தவில்லை. அதனால், யாராவது அவனை கேலி செய்தாலும், அந்தச் சம்பவத்தைக்கூட தனது துணிச்சலையும் திறமையையும் நிரூபிக்கும் ஒரு நிகழ்வாகவே பெருமையுடன் கருதுவான்.”
இந்த நேரத்தில்> பேதுருவைக் குறித்து சிந்தித்தேன். பேதுருவின் வாழ்க்கையையும் ஊழியத்தையும் காண்பதற்கு முன்பு, அவன் எப்படிப்பட்ட மனிதர் என்பதை வெளிப்படுத்தும் பல சம்பவங்களை வேதாகமத்தை வாசித்து அறிந்த பிள்ளைகள் எடுத்து கூறக்கூடும். அவர் ஒரு மீனவர். தண்ணீரின் மேல் நடந்தவர், இயேசுவின் சீடர். “இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன்” என்று இயேசு கூறிய சிறப்பான மனிதர் அவர்!
ஆனால்> பேதுருவின் வாழ்க்கையில் இன்னொரு பக்கமும் இருந்தது. அவர் மிகவும் அவசரப்பட்டு செயல்படுகிற மனிதராக இருந்தார். தான் மிகவும் ஞானமுள்ளவன் என்று எண்ணி> இயேசுவையே கண்டித்தவர் அவர்தான். உமக்காக என் உயிரையே கொடுப்பேன் என்று உறுதியாகக் கூறியவரும் அவர்தான். மிகவும் துணிச்சலுடன் மற்றொரு மனிதனுடைய காதை வாளால் வெட்டியவரும் அவர்தான்.
பிரச்சினை என்னவென்றால்> பேதுருவிடம் ஒருவித நம்பிக்கை இருந்தது. அவர் நம்பிக்கை இழந்த நபர் அல்ல. அவர் தனது நம்பிக்கையை எதில் வைத்திருந்தார் என்பதே பிரச்சினையாக இருந்தது. அவர் தன்னிடத்திலேயே நம்பிக்கையை வைத்திருந்தார். இறுதியில் என்ன நடந்தது? பேதுரு மனம்நொந்துபோனான். பேதுரு கசப்பாக அழுதான்.
அவன் ஒரு போர்க்களத்தில் தோல்வியடையவில்லை. வாளேந்திய ஒரு ரோமப் படைவீரனுக்கு முன்பாகவும் தோல்வியடையவில்லை. ஒரு சாதாரணமான கேள்வியைக் கேட்ட ஒரு பெண்மணி முன்பாகவே அவன் தோல்வியடைந்தான். ‘நீயும் இயேசுவுடன் இருந்தவன் அல்லவா?’
அந்த நேரத்தில் பேதுரு துணிச்சலாக, வலிமையானவனாக, உறுதியானவனாக பதிலளிக்க முடியவில்லை. தன்னிடமே வைத்திருந்த அவனது நம்பிக்கை, தன்னுடைய பலவீனத்தின் பாரத்தைத் தாங்கிட முடியவில்லை. அவன் தோல்வியடைந்தான். பயந்தான். உண்மையை கூற மறுத்தான்.
ஆனால் அந்த நிமிடம் அவனுடைய வாழ்க்கையின் முடிவாக மாறிவிடவில்லை.
உயிர்த்தெழுந்த கிறிஸ்துவின் பாதத்தில் மறுபடியும் வந்து அமர்ந்தபோது, பேதுரு மறுசீரமைக்கப்பட்டான். மீட்டெடுக்கப்பட்டான். புதுப்பிக்கப்பட்டான். மறுபடியும் நிலைநிறுத்தப்பட்டான். இயேசு அவனிடம் கேட்டது ஒரு புதிய எளிமையான கேள்வி ஒன்றுதான்:
“நீ என்னை நேசிக்கிறாயா?”
‘பேதுருவாகிய உனக்கு இன்னொரு வாய்ப்பைக் கொடுக்கிறேன். இந்த முறை நீ போதுமான அளவு வலிமையானவனாகவும் உண்மையானவனாகவும் இரு பார்ப்போம்’ என்று இயேசு கூறவில்லை.
“நீ இதுவரை செய்த எல்லாத் தவறுகளையும் நினைத்துக்கொண்டு இங்கே உட்கார்ந்து வருத்தப்பட்டு மனந்திரும்புவோம்” என்றும் அவர் சொல்லவில்லை.
இல்லை. “இப்பொழுது, இங்கே. நீ என்னை நேசிக்கிறாயா?”
அந்த ஒரேயொரு கேள்வி: பேதுரு தனது நம்பிக்கையை எதில் வைத்திருந்தான் என்பதை வெளிப்படுத்தியது. அதே நேரத்தில் அதை மாற்றவும் செய்தது.
அந்த ஒரேயொரு கேள்வி, பேதுருவுக்கு மறுபடியும் சிந்திப்பதற்கான வாய்ப்பை அருளியது.
அவனுடைய நம்பிக்கை மீண்டும் வந்தது. அது வெறும் தன்னம்பிக்கையாகவோ> தற்பெருமையாகவோ வறட்டு துணிச்சலாகவோ வரவில்லை. அது கீழ்ப்படிதலாக வந்தது.
ஒருகாலத்தில் சிலுவையைத் தவிர்ப்பதற்காக வாளைச் சுழற்றிய அதே மனிதன்> இப்போது, அந்த நேரத்திற்கு அடிபணிந்தவனாக, சிலுவையை நோக்கி நடக்க ஆரம்பித்தான். ஏனென்றால், இப்போது அவன் சார்ந்திருந்தது தனது சொந்த வலிமையில் அல்ல.
அன்பானவர்களே. நீங்கள் அழகானவரா? நல்லவரா? முக்கியத்துவம் வாய்ந்தவரா? மற்றவர்களால் ஏற்றுக்கொள்ளப்படுகிறவரா? பிரபலமானவரா? போதுமானவரா? என்னை பெருமைப்படுத்தும் அடையாளம் என்ன என்ற கேள்விகள் உங்கள் மனதில் தொடர்ந்து எழும்பத் தொடங்கும்போது, இதை நினைவில் கொள்ளுங்கள்:
நம்முடைய அடையாளத்தையும் நம்பிக்கையையும் நம்முடைய திறமை, வலிமை, புகழ், ஏற்றுக்கொள்ளப்படுதல் ஆகியவற்றில் அல்ல; உயிர்த்தெழுந்த கிறிஸ்துவில் வைக்க வேண்டும்.
ஆக, நமது நம்பிக்கை நம்மிடத்திலும்> நம்மால் செய்யக்கூடிய காரியங்களிலும் தங்கியிருக்க கூடாது. அது உயிர்த்தெழுந்த நம்முடைய ஆண்டவரின் வல்லமையிலும்> அவர் ஏற்கனவே நமக்காகச் செய்திருக்கும் காரியங்களிலும் தங்கியிருக்க வேண்டும். அன்பானவர்களே> என்ன நீங்கள் அவரை நேசிக்கிறீர்களா?

