ஸ்காட்லாந்து தேசத்தில் ஏழை பாதிரியார் ஒருவர் வாழ்ந்து வந்தார். தனது வருமானம் சிறியதாய் இருந்தாலும், அதை சிறுக சிறுக சேமித்து ஒரு அழகிய ஆலயம் ஒன்றினைக் கட்டினார், மீதமிருந்த பணத்தில் ஆலயத்தினுள்போட நாற்காலி, மேஜை போன்றவற்றை வாங்கினார்.ஆனால் ஆராதனைக்கு முக்கியமான பியானோ இசைக்கருவியை வாங்கும் அளவிற்கு அவரிடம் பணம் இல்லாத காரணத்தினால் பழைய பியானோ ஒன்றினை ஏலத்தில் எடுக்க முடிவு செய்தார்.

images

பாதிரியாரின் வளர்ச்சியை பிடிக்காத வியாபாரி ஒருவர் பாதிரியாரின் வீட்டின் அருகில் வாழ்ந்து வந்தார். பாதிரியாரின் பியானோ வாங்கும் எண்ணத்தை அறிந்த அந்த வியாபாரி, எப்படியாகிலும் அந்த பியானோவை தான் வாங்கிவிட வேண்டும் என்ற எண்ணத்தில் ஏலக்கடைக்குச் சென்றார்.

பாதிரியாரோ அதை அறியாமல் இவ்வாறு ஜெபித்துவிட்டு சென்றார். “அன்புள்ள இயேசப்பா, எனது கைகளில் 10 பவுண்டுகள் மட்டுமே உள்ளது. இந்த பணத்தை ஆசீர்வதித்து தாரும். இந்த தொகைக்கு மேல் ஏலம் கேட்க என்னிடம் பணம் இல்லை. எனவே எல்லாவற்றையும் நீ பார்த்துக் கொள்ளும் ஆமென்”.

ஏலக்கடையில் ஏலக்காரர், இந்த அழகிய பியானோவின் விலை 3 பவுண்டு, விருப்பம் உள்ளவர்கள் மேலே கேளுங்கள் என்று கூற 4 பவுண்டு, 5 பவுண்டு 7 பவுண்டு, 9 பவுண்டு என்று ஒவ்வொருவராக கேட்டனர். கடைசியாக பாதிரியார் 10 பவுண்டு என்று கத்தினார். அதற்கு மேல் ஒருவருக்கும் அப்பியானோவை வாங்க விருப்பமில்லை. 10 பவுண்டு ஒரு தரம் 10 பவுண்டு இரண்டு தரம், 10 பவுண்டு ………. என்று எலக்காரர் முடிக்கும் முன்பு 11 பவுண்டு என்று ஒரு குரல் ஒலித்தது. குரலுக்கு சொந்தக்காரர் அந்தா வியாபாரி. பாதரியார் இதைசற்றும் எதிர்ப்பார்க்கவில்லை.

பியானோ அந்த வியாபாரியின் கைக்குபோனது, மனசோர்வோடு வீடு வந்து சேர்ந்தார் பாதிரியார்.சிறிது நேரத்தில் அவர் வீட்டின் வாசலில் ஓர் லாரி வந்து நின்றது. அதில், தான் வாங்க எண்ணிய அழகிய பியானோ இருந்தது. அதை வாங்கிய வியாபாரி பாதிரியாரிடத்தில் வந்து பாதிரியாரே இந்த பியானோவானது என் வீட்டு வாசலின் அகலத்தைக் காட்டிலும் அகலமாக உள்ளது. எப்படி சாய்த்து நகர்த்தினாலும் இடிக்கிறது. எனவே நீங்கள் இதை எடுத்துக்கொண்டு நீங்கள் கொடுக்க நினைத்த 10 பவுண்டுகளைத் தாருங்கள் என்றார்.

பாதிரியாரின் உள்ளம் சந்தோஷத்தினால் துள்ளிற்று. என்னிடம் பியானோவை ஏற்றிச் செல்ல லாரிக்கு பணம் இல்லைஎன்று அறிந்த என் தேவன் இலவசமாக லாரி கட்டணமின்றி பியானோவை ஆலயத்தில் கொண்டு சேர்த்தார் என்று சொல்லி தேவனைத் துதித்தார். ஆம் நண்பனே நாம் இயேசப்பாவிற்கு நமக்கு எந்த நேரத்தில் எதைக் கொடுக்க வேண்டும் என்பது நன்றாகத் தெரியும். நாம் பார்வைக்கு அது முடியாததாய் தோன்றினாலும் ஏற்ற வேளையில் தமது ஒத்தாசையை அனுப்பி நன்மையாய் நம் தேவைகளை சந்திப்பார். எனவே விசுவாசத்தோடு ஏற்ற நேரத்திற்காய் காத்திருப்போம்.

எனக்கு ஒத்தாசை வரும் பர்வதங்களுக்கு நேராக என் கண்களை ஏறேடுக்கிறேன். வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தரிடத்திலிருந்து எனக்கு ஒத்தாசை வரும். சங். 121. 1,2.

By தமிழ் கிறிஸ்தவன்

தமிழ் கிறிஸ்தவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *