டெல்லி: இஸ்ரேல் நாட்டிற்கு முதல் முறையாக ஒரு இந்திய பிரதமர் பயணம் செய்கிறார் என்றால் அது நம்ம மோடி தான். வருகிற 2017 ஜூலை மாதம் பிரதமர் மோடி மத்திய கிழக்கு நாடுகள் உடனான நட்புறவை வலுப்படுத்தும் நோக்கில் இஸ்ரேல் நாட்டிற்குப் பயணம் செய்கிறார்.

இந்தப் பயணத்தில் பாகிஸ்தான், சீனா எல்லையில் நாட்டின் பாதுகாப்பை அதிகரிக்கும் வகையில் 2 மிகப்பெரிய ஆயுத ஒப்பந்தத்தைச் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

முக்கிய ஆயுதம்

இந்த ஒப்பந்தத்தில் ராணுவத்திற்காக ஆன்டி டாங்க் ஏவுகணை மற்றும் கடற்படையைப் பாதுகாக்க வான் வழி பாதுகாப்பு டிபென்ஸ் சிஸ்டம் குறித்து இரு ஒப்பந்தங்களைச் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகப் பாதுகாப்புத் துறையின் பெயர் வெளியிடப்படாத ஒரு அதிகாரி தெரிவித்துள்ளார்.

இந்தியா இஸ்ரேல் இரு நாடுகளும் சர்வதேச தீவிரவாதத்திற்கு எதிராக நிற்கும் நிலையில் இந்தியா இஸ்ரேல் நட்புறவில் வரலாறு காணாத வகையில் வலிமை அடையும்.

புதிய விமானம்

இதனுடன் இந்தியாவில் தயாரிக்கப்படும் முதல் போக்குவரத்து விமானத்தை மேலும் சக்திவாய்ந்த ஒன்றாக மாற்ற முடிவு செய்துள்ள இந்திய அரசு. இதில் தொலை தூரத்தில் தாக்க கூடிய ஒரு ஏவுகணையையும் இஸ்ரேல் உடன் வாங்க முடிவு செய்துள்ளது. ஆக, இந்த ஒப்பந்தத்தின் முழுமையான மதிப்பு 2 பில்லியன் டாலர்.

ஏவுகணை

அடுத்த இரண்டு மாத்தில் இந்திய ராணுவத்திற்காக ஸ்பைக் என்னும் ஆன்டி டாங்க் மிசைல் மற்றும் பராக்-8 என்னும் வான்வழி பாதுகாப்பு ஏவுகணையும் வாங்க இறுதி முடிவுகள் எடுக்கப்படும். மேலும் இந்த ஒப்புந்தத்தின் மதிப்பு 1.5 பில்லியன் டாலர் என்றும் இந்த ஒப்பந்தத்தின் மூலம் இஸ்ரேல் இந்தியாவிற்கு அடுத்த 2 வருடத்திற்குச் சுமார் 8,000 ஏவுகணைகளை டெலிவரி செய்யும்.

250 பில்லியன் டாலர்

பாகிஸ்தான், சீனா எல்லையில் நாட்டின் பாதுகாப்பை வலுப்படுத்தும் மோடி 250 பில்லியன் டாலர் திட்டத்தில் இது முக்கிய இடத்தைப் பிடிக்க உள்ளது. ஆம், 2025ஆம் ஆண்டுக்குள் இந்திய பாதுகாப்பு உறுதி செய்யும் வகையில் முப்படைக்கும் சுமார் 250 பில்லியன் டாலர் மதிப்பில் ஆயுதங்களை வெளிநாட்டில் இருந்து வாங்கும், உள்நாட்டில் தயாரிக்கவும் மோடி திட்டம் தீட்டியுள்ளார்.

ஒப்புதல்

ஸ்பைக் மிசைல் வாங்குவதற்கான திட்டம் இந்திய பாதுகாப்பு கொள்முதல் குழு அக்டோபர் 2014இல் ஒப்புதல் அளித்தது, பரார்-8 ஏவுகணை கொள்முதல் 2017 ஏப்ரல் 3ஆம் தேதி நடத்தக் கூட்டத்தில் ஒப்புதல் பெற்றுள்ளது. இதுகுறித்துப் பாதுகாப்புத் துறை சார்ந்த உயர் அதிகாரிகள் யாரும் கருத்து கூறவில்லை.

அமெரிக்கா, ரஷ்யா, இஸ்ரேல் மார்ச் மாதத்துடன் முடிந்த 2016ஆம் ஆண்டுடன் கடந்த 3 நிதியாண்டுகளில் இஸ்ரேல் சுமார் 7,600 கோடி ரூபாய் மதிப்பிலான சுமார் 10 டீல்களில் கையெழுத்திட்டுள்ளது. மேலும் அமெரிக்கா, ரஷ்ய நாடுகளை அடுத்து இஸ்ரேல் நாடுதான் இந்தியாவிற்கு அதிகளவிலான ஆயுதங்களை அளித்துள்ளது.

கேள்விக்குறி

கடந்த சில மாதங்களாகப் பல்வேறு அரசியல் காரணங்களால் இந்தியா இஸ்ரேல் நாடுகள் மத்தியில் இருக்கும் நட்புறவு கேள்விக்குறியாகி இருந்த நிலையில், பிரதமர் மோடி மற்றும் இந்திய அரசின் சிறப்பான நடவடிக்கையில் இரு நாடுகள் மத்தியில் இருக்கும் நட்புறவில் எவ்விதமான தொய்வு ஏற்படவில்லை. இதற்குச் சான்றாகவே இந்த 2 பில்லியன் டாலர் அதாவது 1300 கோடி ரூபாய் மதிப்பிலான ஆயுத ஒப்பந்தம்.

1,300 கோடி ரூபாய் டீல்

இந்திய ராணுவம் மற்றும் கடற்படையின் பாதுகாப்பை அதிகரிக்க இந்திய அரசு இஸ்ரேல் நாட்டின் அரசு நிறுவனமான இஸ்ரேல் ஏரோஸ்பேஸ் இன்டஸ்ட்ரீஸ் உடன் 1300 கோடி ரூபாய் மதிப்பிலான ஏவுகணையை வாங்க ஒப்பந்தம் செய்துள்ளது. மேலும் இது இந்நிறுவனத்தில் மிகப்பெரிய டீல் என் இஸ்ரேல் ஏரோஸ்பேஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனம் கடந்த வாரம் தெரிவித்துள்ளது.

ஏவுகணை

கடந்த வாரம் இந்தியா இஸ்ரேல் நாடுகள் மத்தியிலான நடந்த இந்த ஒப்பந்தத்தில் இந்திய அரசு வான் வழியில் தாக்க கூடிய அதிநவீன ஏவுகணைகள், மீடியம் தொலைவில் தாக்க கூடிய ஏவுகணைகளையும் வாங்க முடிவு செய்துள்ளது.

இஸ்ரேல் ஏரோஸ்பேஸ் இன்டஸ்ட்ரீஸ்

இதனைத் தாண்டி இந்த ஏவுகணைகளின் லாஞ்சர், தொலைத்தொடர்பு கருவிகள், அதனைக் கட்டுப்படுத்தும் தொழில்நுட்பம் ஆகியவற்றை அளிக்க உள்ளது இஸ்ரேல் ஏரோஸ்பேஸ் இன்டஸ்ட்ரீஸ். இதன் மதிப்பு 1.6 பில்லியன் டாலர். இந்நிலையில் 8,000 ஏவுகணைகளை வாங்கும் இந்தப் புதிய திட்டத்தை மத்திய அரசு மோடியின் பயணத்தில் செயல்படுத்த திட்டமிட்டுள்ளது.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின்

இச்சந்திப்பு குறித்து பிரதமர் அலுவலகம் கூறுகையில் இரு நாடுகளும் முக்கிய துறைகளில் இணைந்து பணியாற்றுவதில் ஆர்வமாக உள்ளதாகவும். இத்திட்டங்களை குறித்து பிரதமர் மோடி கடந்த செப்டம்பர் மாதம் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் அவர்களை சந்தித்து பேசியதாகவும் பிரதமர் அலுவலகம் தெரிவித்தது. இருநாடுகளும் இணைந்து செயல்பட 1992ஆம் ஆண்டு இணைப்பு ஒப்புந்தம் செய்துக்கொண்டாலும், இஸ்ரேல் உயர் அதிகாரிகள் இந்தியா வருவது இதுவே முதல் முறையாகும்.

பாதுகாப்பு துறையில் மத்திய அரசு அன்னிய முதலீட்டை 26 சதவீதத்தில் இருந்து 49 சதவீதமாக உயர்த்தை அடுத்து இஸ்ரேல் இந்தியாவுடன் அதிகளவிலான வர்த்தகம் செய்ய ஆர்வம் காட்டி வருகிறது.

By தமிழ் கிறிஸ்தவன்

தமிழ் கிறிஸ்தவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *