பிரசங்கியாரும் விவசாயியும்

Phervil St Juste carries rice in Artibonite Valley in Haiti
ஒரு பிரசங்கியார் ஓர் கிராமத்தில் உள்ள ஓர் சிறிய சபையில் பிரசங்கிப்பதற்காய் முதன் முறையாய் போயிருந்தார். அங்கே ஒரு மனிதன் மாத்திரமே வந்திருந்ததால் பிரசங்கிப்பதா, இல்லையா என்ற குழப்பத்தில் இருந்தார். அந்த மனிதனிடமே தான் பிரசங்கிக்கவோ வேண்டாமா எனக் கேட்டார். அதற்கு அந்த மனிதன் “எனக்கு பிரசங்கத்தை பற்றித் தெரியாது. நான் ஒரு பிரசங்கி அல்ல, நான் ஓர் விவசாயி. நான் ஒரு வண்டி நிறைய வைக்கோல் எடுத்துக் கொண்டு போகும் போது ஒரு மாடு மட்டும் இருந்தாலும் அம்மாட்டிற்கு வைக்கோல் போடுவேன்” என்றான்.இவ் வார்த்தைகளால் உற்சாகம் அடைந்த பிரசங்கியார், இரண்டு மணித்தியாளங்களாக பிரசங்கித்தார். பின்னர் அப்பிரசங்கத்தை கேட்ட அம் மனிதனிடம் பிரசங்கம் எப்படி இருந்ததென கேட்ட போது அவன் “நான் ஒரு பிரசங்கியல்ல, பிரசங்கத்தை பற்றி எனக்கு தெரியாது. நான் ஒரு விவசாயி. நான் வண்டி நிறைய வைக்கோலுடன் போகும் போது ஒரு மாடு இருந்தால், அந்த ஓர் மாட்டிற்கு வண்டி நிறைய உள்ள அனைத்தையும் உண்ணக் கொடுக்க மாட்டேன்” என்றானாம்.

 

 

Authorதமிழ் கிறிஸ்தவன்

தமிழ் கிறிஸ்தவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *