சிறியவையே சிறந்தது

500 /1000 அல்ல..100,50,10 இன்று மதிப்புள்ளவை!

பெரிய பெரிய சபை கட்டிடங்களையும், ஜெப கோபுரங்களையும் தோட்டங்களையும் கூட்டங்களையும், டிவி சேனல்களையும் பிரபலங்களையும் கண்டு ஏமாந்து போகாதே!

பணக்காரன் அல்ல ஏழை லாசருவே பரலோகம் போய் சேர்ந்தான்!

எருசலேம் அரண்மனை அல்ல பெத்லகேமின் மாட்டுக் கொட்டகை!

ஐசுவரியவான்களின் காணிக்கை அல்ல..ஏழை விதவையின் இரண்டு செப்புக்காசு !

பெயர் அறியாத அநேக ஏழை எளிய விசுவாசிகளின் கண்ணீர் ஜெபங்களும்,எளிய காணிக்கைகளும், பாரத்தோடு செய்யும் தனி ஆள் மற்றும் கைப்பிரதி ஊழியங்களும்..

நடையாய் நடந்து காடுகளிலும் மலைகளிலும் செய்யும் மிஷினரி ஊழியங்களும் பரலோகக் கணக்கில் இடைவிடாமல் பதிவாகிக் கொண்டே இருக்கிறது!

download

புத்தியோடு பிழைத்துக் கொள் !

“இதோ இப்பொழுதே அனுக்கிரக காலம், இப்பொழுதே இரட்சணிய நாள்..”

பதுக்கி வைத்திருக்கும் நோட்டுக்களை என்ன செய்வது என்பதே அநேகரின் கவலை..

கர்த்தருக்காக செய்ய நினைக்கும் எல்லாவற்றையும் இப்போதே செய்துவிடு!

அது ஜெபமாக இருக்கட்டும்..அல்லது இது வரை தூங்கிக் கிடந்த வேத வாசிப்பாக இருக்கட்டும்..

ஓரங்கட்டப்பட்ட ஊழியமாக இருக்கட்டும்..அல்லது மன்னிக்கப்படாத கசப்புகளாக இருக்கட்டும்..

செப்பனிடப்படாத உன் ஆவிக்குரிய பலிபீடமோ அல்லது நொறுங்கிப்போன தேவனோடு உள்ள உறவோ..

எதுவாக இருந்தாலும் இன்றே இப்போதே சரி செய்துவிடு!
நாளை என்பது யாருடைய நாளேட்டிலும் இல்லை..
Tomorrow never comes !

ஆகவே..
“உன் வீட்டுக் காரியத்தை..
சபையின் காரியத்தை..
உன் ஆவிக்குரிய காரியத்தை..தேவனேடும் மனிதரோடும் உள்ள காரியத்தை..

ஒழுங்குபடுத்திவிடு!
பிழைக்க வாய்ப்பில்லாமல் யாவும் மரித்துப் போகுமுன் எசேக்கியாவைப் போல சுவர்ப்புறமாகவோ சிலுவையைப் பிடித்துக்கொண்டோ கண்ணீரோடு புலம்பு !
தேவனை நோக்கி வேண்டிக்கொள்..

ஒரு வேளை மன்னிக்கப்படலாம்..
(அப் 8 :22)

By தமிழ் கிறிஸ்தவன்

தமிழ் கிறிஸ்தவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *