கிறிஸ்மஸ் மரம் – சிறிலங்கா சாதனை

கின்னஸ் சாதனைக்கென உருவாக்கப்பட்ட உலகின் உயரமான கிறிஸ்மஸ் மரம் கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடிப்பதற்காக திறந்துவைக்கப்பட்டது.

சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் உள்ள காலிமுகத் திடலிலேயே, இந்த கிறிஸ்மஸ் மரம் நிறுவப்பட்டுள்ளது.

உலகிலேயே மிகப் பெரிய இந்த கிறிஸ்மஸ் மரத்தில் சுமார் 8 இலட்சம் மின்குமிழ்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த கிறிஸ்மஸ் மரத்தை உருவாக்குவதற்கு சுமார் 80 ஆயிரத்து 600 டொலர் செலவா

6 அடி உயரமான கிறிஸ்மஸ் தாத்தா உருவமும் இந்த மரத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

325 அடி உயரத்தில் நிறுவப்பட்டுள்ள இந்த கிறிஸ்மஸ் மரம், உலகின் மிக உயரமான கிறிஸ்மஸ் மரம் என்று கின்னஸ் சாதனை ஏட்டில் பதிவு செய்யப்படவுள்ளது.

இந்த கிறிஸ்மஸ் மரத்தின் உச்சியில் 20 அடி உயரமுள்ள நட்சத்திரமும் அமைக்கப்பட்டுள்ளது.

xmass-tree-2-350x450

தென்சீனாவில் ஏற்கனவே அமைக்கப்பட்ட செயற்கை கிறிஸ்மஸ் மரத்தின் சாதனையைமுறியடிக்கும் வகையில்,57 மீற்றர்(187 அடி) அளவான மரம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, 2009 ஆம் ஆண்டு 90 மீற்றர் (295 அடி) உயரமான நத்தார் மரமொன்றை தாம் நிர்மாணித்ததாக மெக்ஸிகோவைச் சேர்ந்த குழுவொன்று தெரிவித்திருந்தது.

கடந்த ஆண்டில் மனிதர்களைக் கொண்டு உலகில் மிகப் பெரிய கிறிஸ்மஸ் மரத்தை அமைத்து உலக சாதனையில் இடம்பெற்றுள்ளது கேரளா.

ஏறத்தாழ 4,030 பேர் தங்களுக்குரிய ஆடை நிறங்களுடன் கூடி கிறிஸ்மஸ் மரமாக நின்றுள்ளனர். பிற்பகலில் தொடங்கிய இந்நிகழ்வு மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது.

கின்னஸ் சாதனைக்கென உருவாக்கப்பட்ட   கிறிஸ்மஸ் மரத்தை பார்ப்பதற்கு  பெருந்திரளான மக்கள் ஆர்வம் காட்டி வருகிகின்றனர்.

 

 

Authorதமிழ் கிறிஸ்தவன்

தமிழ் கிறிஸ்தவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *