ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்த அரங்கு ஒன்றில் கேள்வி ஒன்று கேட்கப்பட்டது. அந்தக் கேள்வி அங்குள்ள மக்களை சிந்திப்பதற்குண்டான வழிவகையை ஏற்படுத்திக் கொடுத்தது. என்ன அந்த கேள்வி என்று தான் நம்மிடம் எழுகின்றது.

அதாவது, தலைவர்கள் பிறக்கின்றார்களா? அல்லது உருவாகின்றார்களா? என்பது தான் அந்த கேள்வி. அங்குள்ள பெரும்பாலான மக்கள் பிறக்கின்றார்கள் என்று தான் பதிலளித்தார்கள். ஆனால், உண்மையில் அது தவறான ஒன்று தான். உண்மையில் தலைவர்கள் பிறப்பதில்லை. உருவாகத்தான் செய்கின்றார்கள்.

ஆம். ஒவ்வொரு சூழ்நிலையைப் பொறுத்துதான், நிலைமைகளைப் பொறுத்துத்ததான் தலைவர்கள் உருவாகின்றார்கள். ஆனால், சில பேரிடம் இயல்பாகவே தலைமைத்துவத்திற்கான பண்புகள் இருக்கும். ஆனால், அவர்களும் ஒரு நாள் தலைவர்களாக அறியப்படுவார்கள்.

தலைவர்களிடம் இருக்கக்கூடிய ஒரு சில தன்மைகளைப் பற்றி பார்ப்போம். அதில், பத்து விஷயங்கள் முக்கியமானவையாகும். அந்த பத்து விஷயங்கள்.

1. நேர்மை

2. பங்களிப்பு

3. எந்த நேரத்திலும் தொடர்பு கொள்ளும் நிலை

4. தன்னம்பிக்கை

5. அர்ப்பணிப்பு

6. நேர்மறையான மனநிலை

7. சிந்திக்கும் ஆற்றல்

8. முன்னேற்றும் ஆர்வம்

9. ஆர்வப்படுத்துதல்

10. அணுகுமுறை, போன்ற இந்த பத்து விஷயங்களும் தலைவர்களிடம் இருக்கக்கூடியவைகளாகும்.

 

image-for-pd-blog

 

இதையும் தாண்டி இன்னும் நிறைய விஷயங்கள் இருக்கும்.

ஆனால், இந்த விஷயங்களை நம்முடைய வாழ்வில் வளர்த்துக் கொண்டலே, நாமும் ஒரு சிறந்த தலைவராக வர முடியும்.

By தமிழ் கிறிஸ்தவன்

தமிழ் கிறிஸ்தவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *