இந்திய சிறுவனின் கிறிஸ்துமஸ் கடிதம்

இந்தியவம்சாவளி சிறுவன் ஒருவன் கிறிஸ்மஸ் தாத்தாவுக்கு எழுதிய உருக்கமான கடிதம் ஒன்று உலகையே உருக வைத்துள்ளது.

இங்கிலாந்தின் மிட்லேடண்ஸ் பகுதியில் வசிப்பவர் ஆரூஷ் ஆனந்த் . இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இந்த சிறுவனுக்கு ஏழு வயதுதான் ஆகிறது. இவர் நட்டிகாம் உயர்நிலைப்பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார். இந்தநிலை ஆரூஷ் கிறிஸ்துமஸ் தாத்தாவிற்கு எழுதிய கடிதம் ஒன்று அனைவரையும் அதிர்ச்சியடைச் செய்துள்ளது.

அரூஷ் படிக்கும் பள்ளியில் அவரது ஆசிரியர் மாணவர்களிடம் கிறிஸ்துமஸ் தாத்தாவிடன் என்ன வேண்டும் என்பதை கடிதமாக எழுதுமாறு கூறினார். உடனே மாணவர்கள் தங்களுக்கு வேண்டிய பரிசு பொருட்களை எழுதி கொண்டுத்தனர். ஆனால் ஆரூஷோ ,” கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று சிரியாவில் அமைதி நிலவ வேண்டும் . அதுதான் எனக்கான கிறிஸ்துமஸ் பரிசு ” என்று எழுதி இருகிறார்.இந்த சிறுவனின் கடிதத்தை அவரது ஆசிரியர் ரிச்சர்டு மில்லர் வெளியிட்டிருக்கிறார்.

மேற்கு ஆசிய நாடுகளில் ஒன்று சிரியா. இந்த நாட்டில் கடந்த 2011–ம் ஆண்டு முதலே உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது. சிரிய அதிபர் பஷார் அல் ஆசாத்தின் படைக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் பல இடங்களில் தாக்குதல்களை தொடுத்து வருகின்றனர்.இந்த தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் பலர் கொள்ளப்படுவருகின்றனர். சிரியாவின் அப்பாவி பொது மக்கள் மீது நடக்கும் தாக்குதலானது உலகையே கவலையடையச் செய்துள்ளது.

Authorதமிழ் கிறிஸ்தவன்

தமிழ் கிறிஸ்தவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *